பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 26ፇ .

55: 109, 2.11: 66, 5.9:99) என்று கொங்கு வேளிரும், கயல் பொரு விழியொடு." (திருவவதாரப் படலம், 75) என்று கம்பரும் பாடியவற்றைக் காண்க. - - முற்றிழையார்: "முற்றிழை மகளிர்." (பெருங்கதை. 1,47, 253) எனக் கொங்கு வேளிர் பாடியதைக் காண்க.

அடுத்து வரும் 128-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:'அவ்வாறு திருவாரூரில் வாழும் தொண்டர்கள் தம்மிடம் வந்து தம்மை எதிர்கொண்டு வரவேற்றுத் த்ம்மைப். பணிகிறவர்களாகிய அந்தத் தொண்டர்களுக்கு முன்னால் வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் தம்முடைய கைகளை அஞ்சலியாகக் குவித்துக் கும்பிட்டு விட்டு, எழுந்தருளித் தம்முட்ைய திருவுள்ளம் மகிழ்ச்சியை அடைய அந்தத் தலத்தில் உள்ள ஒரு தெருவின் வழியே எழுந்தருளு பவராகித் தம்மை வரவேற்ற திருத்தொண்டர்களைப் பார்த்து, "எந்தை இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர்” என்ற தொடர் வரும் செய்யுளின் ஒசை நன்றாக அமைந்தவையும் உரிய பண்கள் அமைந்தவையும் ஆகிய பல திருப்பதிகங்களைப் பாடியருளித் தம்முடைய தலைவனாகிய வன்மீக நாதனுடைய ஆலயத்தில் உள்ள அழகிய் கோபுர வாசலை அந்த நாயனார் அடைந்தார்." பாடல் வருமாறு:

வந்தெதிர் கொண்டு வணங்கு வார் முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து சிந்தை களிப்புற வீதி யூடு

செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி "எங்தை இருப்பதும் ஆரூர் அவர்

எம்மையும் ஆள்வரோ கேளீர்.” என்னும் சந்த இசைப்பதிகங்கள் பாடித் -

தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார். ' வந்து-அவ்வாறு திருவாரூரில் வாழும் தொண்டர்கள் தம்மிடம் வந்து. எதிர்கொண்டு-தம்மை எதிர்கொண்டு.