பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பெரிய புராண விளக்கம்-2

வரவேற்று. வணங்குவார்-பணிகிறவர்களாகிய அந்தத் தொண்டர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். முன்முன்னால், இடமுன். வன்றொண்டர்-வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார். அஞ்சலி-தம்முடைய கைகளை அஞ்சலியாக, கூப்பி-குவித்துக்கும்பிட்டு. வந்து எழுந்தருளி, சிந்தை-தம்முடைய திருவுள்ளம். களிப்பு-மகிழ்ச்சியை. உறஅடைய வீதியூடு-திருவாரூரில் உள்ள ஒரு தெருவின் வழியே. செல்வார்-எழுந்தருளுபவராகிய அந்த நாயனார்; முற்றெச்சம். திருத்தொண்டர் தம்மை-தம்மை வரவேற்ற திருத்தொண்டர்களை ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. நோக்கி-பார்த்து. எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர் என்னும் எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளி - எந்தை இருப் பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர் என்று முடியும், சந்த-செய்யுள் ஒசை நன்றாக அமைந்த இசை-உரிய பண்கள் அமைந்தவையும்; ஆகுபெயர். இசை ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பதிகங்கள்.பல திருப்பதிகங்களை. பாடி - பாடியருளி. தம்-தம்முடைய. பெருமான் - தலை வனாகிய வன்மீக நாதனுடைய ஆலயத்தில் விளங்கும்; ஆகுபெயர். திரு-அழகிய.வாயில்-கோபுர வாசலை. சார்ந் தார்-அந்த நாயனார் அடைந்தார்.

இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருப்பதிகம் காந்தாரப் பண் அமைந்தது. அதில் வரும் முதற் பாசுரம் வருமாறு:

கரையும் கடலும் மலையும் காலையும்

மாலையும் எல்லாம்

உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர

. - லோகன்

வரையின் மடமகள் கேள்வன் வானவர் -

- . தானவர்க் கெல்லாம்

அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும்

ஆள்வரோ கேளிர். '