பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 19

வோடு விளங்க எனலும் ஆம். ப்:சந்தி. போற்றியஅவற்றை வாழ்த்திப் பாராட்டிய தொழிலராகி-வேலை யைப் பெற்றவர்களாகி, ஒருமை பன்மை மயக்கம். இகழ்ச்சி -பிறர் இகழ்ந்து பேசுதல். ஒன்றானும்-ஒரு சிறிதளவே னும். இன்றி-இல்லாமல், ஏந்து-தங்கள் கைகளில் எடுத் துக் கொண்ட பூமாலை-மலர்மாலைகளைத்தொங்கவிட்ட: ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி: பந்தர்-காவணத்தைக் காட்டும். நிகழ்ச்சியின்-வேலையில். மைந்தர்-வலிமையைப் பெற்ற ஆடவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஈண்டிகூட்டமாகக் சுடி நின்று. நீள்-நீளமாகிய. முளை-நெற் பயிர்களின் முளைகளைப் பெற்ற பாலிகைகளை; ஒருமை பன்மை மயக்கம். சாத்தினார்கள்-திருமணம் நடைபெறும் காவணத்தில் கொண்டுபோய் வைத்தார்கள். -

பிறகு வரும் 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

திருமணமாகிய மங்கலச் சடங்கிற்கு வேண்டிய பொருத்தமான காரியங்களை விருப்பம் மருவிய அந்தக் - கன்னிகையைப் பெற்ற தாயாரும் தந்தையாரும் புரிய, கொத்துக்களைப் பெற்ற மலரைச் சூடிய குஞ்சியையும் மாலையையும், அந்த மாலையில் வண்டுகள் வந்து மொய்க் கும்வண்ணம் அந்தத் தாரை அணிந்த தோள்களையும்பெற்ற சுந்தரமூர்த்தியை உறவினர்கள் கூடும் திருமணம் நடை பெறும் அழகிய நாளுக்கு முன்பு உள்ள நாளில் பொருத்த மாக உள்ள வேதவிதியின்படி பருத்த முரசம் ஒலிக்க, வாழ்த் துக்களைக் கூறிப் பசுமையான தங்கத்தாலாகிய கயிறாகிய காப்பு நாணை மணமகனாகிய சுந்தரமூர்த்தியினுடைய வலக்கரத்தில் வைத்துக் கட்டினார்கள். பாடல் வருமாறு:

'மணவினைக் கமைந்த கெய்கை

மாதினைப் பயந்தார் செய்யத் துணர்மலர்க் கோதைத் தாமச்

சுரும்பணை தோளி னானைப்