பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 271

வணங்கித் தொழுது, தம்முடைய திருமேனியையும் உயிரை யும் உருக்கும் வண்ணம் புரியும் பக்தியோடு தம்முடைய தலையின்மேல் கூப்பிக் கும்பிட்ட செந்தாமரை மலர்களைப் போன்ற திருக்கரங்களோடும், தூய நறுமணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய வன்மீக நாதனுடைய மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கும் அழகிய ஆலயத்தின் கோபுர அாசலுக்குள் அந்த நாயனார் துழைந்தார். பாடல் வருமாறு:

வானுற நீள்திரு வாயில் கோக்கி

மண்ணு:ற ஐந்துறுப் பால்வ ண்ங்கித் தேனுறை கற்பக வாச மாலைத்

தேவா சிரயன் தொழுதி றைஞ்சி ஊனும் உயிரும் உருக்கும் அன்பால்

உச்சிக் குவித்தசெங் கைகளோடும் துரகறும் கொன்றையன் மூலட் டானம்

சூழ்தியூர் மாளிகை வாயில் புக்கார், ' வான்-ஆகாயத்தை. உற-அளாவ. நீள்-உயரமாக விளங்கும். திரு-அழகிய. வாயில்-ஆலயத்திற்கு முன்னால் உள்ள கோபுர வாசலை. நோக்கி-பார்த்து. மண்-தரையில். உற-படியுமாறு. ஐந்து உறுப்பால்-தலை, கைகள், முழங் கால்கள், பாதங்கள், மூக்கு என்னும் ஐந்து அங்கங் களாலும்; ஒருமை பன்மை மயக்கம். வணங்கி-சுந்தர மூர்த்தி நாயனார் வன்மீக நாதரைப் பணிந்துவிட்டு. இது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். த்: சந்தி: தேன் உறைதேன் நிரம்பியிருக்கும். கற்பக-தேவலோகத்தில் உள்ள கற்பக தருவில் மலர்ந்திருக்கும். வாச-நறுமணம் கமழும். மாலை-மலர்களைக் கட்டிய மாலைகளைத் தொங்க விட்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம், த், சந்தி. தேவா சிரயன்-தேவாசிரயன் என்னும் காவணத்தை. தொழுதுவணங்கிவிட்டு உள்ளே நுழைந்து. இறைஞ்சி-அந்தக் காவணத்தில் அமர்ந்திருக்கும் தொண்டர்களை வணங்கி. ஊனும்-தம்முடைய திருமேனியையும். உயிரும்-தம்முடைய