. 272 பெரிய புராண விளக்கம்-2
உயிரையும். உருக்கும்-உககச் செய்யும். அன்பால்-பக்தி: யோடு; உருபு மயக்கம். உச்சி-தம்முடைய தலையின்மேல். குவித்த-கூப்பிக்கும்பிட்ட செங்கைகளோடும்-செந்தாமரை மலர்களைப் போன்ற கரங்களோடும். துர-தூய்மையான. நறும்-நறுமணம் க ம ழு ம். கொன்றையன்-கொன்றை மலர்மாலையை அணிந்தவனாகிய வன்மீக நாதனுடைய. மூலட்டானம்-மூலஸ்தானத்தை. சூழ்-சுற்றியிருக்கும். திரு. அழகிய மாளிகை-ஆலயத்தின் முன்னால் உயரமாக நிற்கும். வாயில்-கோபுர வாசலுக்குள். புக்கார்-அந்த நாயனார் நுழைந்தாா.
நறும் கொன்றை: "நாற்றம் மிக்க கொன்றை..", கடியா ரல்ங்கற் கொன்றை.”, "கடியார் கொன்றைச் சுரும் பின்மாலை.', 'கடிகொள் கொன்றை.', 'கமழ்கொன்றை யந் திருமலர்', 'கொங்கணி நறுங்கொன்றைத் தொங். கலன்', 'பூந்தாம் நறுங்கொன்றை.', 'கந்தமா மலர்க் கொன்றை.", "நறும் கொன்றைத்தார்.', 'வெறியார் மலர்க் கொன்றையந்தார்.', 'வம்பார் கொன்றை., "விரையினர்ர் கொன்றை.", "கடிபடு கொன்றை நன் மலர்.', 'வெறியுலாம். கொன்றையந் தாரினான்., * விரையார் கொன்றையினாய்.” என்று திருஞான சம்பந்த, மூர்த்தி நாயனாரும், நாறுபூங் கொன்றை வைத்தார்.', கடிகமழ் கொன்றை யானே.”, பூந்தார் நறும்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து.', 'நாறு கொன்றை யும்.”, “ந்ாறுபூங் கொன்றை ', 'கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்.', 'காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடி.', 'பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்.','காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலும்.', கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்.', 'கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை.", "பொன்நலத்த நறுங் கொன்றைச் சடையினான்.', 'வம்புலவு கொன்றைச் சடையாய்.”, 'வண்டிரைக்கும் நறுங்கொன்றைத் தாராய் "நீயே.', 'வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை.", :விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்."