பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 373

'பொன்காட்டக் கடிக்கொன்றை.”, “வெறிவிரவு மலர்க் கொன்றை.', 'நாறு பூங்கொன்றை முடியார்.', 'கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான்.', 'கந்தமலர்க் கொன்றையணி சடையான்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்ளார்.', "விரையார் கொன்றையினாய்.', 'மருவார் கொன்றை மதிசூடி.', 'விரைசெய் மாமலர்க் கொன்றையினானை.”, 'பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந் திலங்க..' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும் பாடியருளிய வற்றைக் காண்க. -

உருக்கும் அன்பு: உண்ணின் றுருக உலகை தருவார்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், உருகு மனத் தடியவர்கட் கூறும் தேனை.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், என்புநைத் துருகி நெக்குநெக், கேங்கி, அன் பெனும் ஆறு கரையது புரள.” என்று மாணிக்கவாசகரும், 'நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும்.', 'அன்பினால் உருகி விழிநீர் ஆறாக.', 'கனிவுபெற உள்ளுருக்கி.", "நெக்குநெக் குருகிப் பணித்தெழுந் திருகை கூப்பிக் கண்ணாறு க்ர்ைபுரள நின்ற அன்பரை.”, “உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள் ஊற்றென. வெதும்பி ஊற்ற...கடல்மடை திறந்தணைய அன்பர். அன்புக் கெளியை.', 'என்பெலாம் நெக்குடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளகமன் தழலின் மெழுக்ாய் இடையறாதுருக வரு மழைபோல் இரங்கியே இருவிழிகள் நீர்இறைப்ப அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு.", "நீராள மாயுருகிக் கண்ணிர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலை யாய் நிற்பேன்.", "கரைந்து கரைந்துருகிக் கண்ணிர் ஆறாக.", "முகமெலாம் கணிர்முத் தரும்பிடச் செங்கை, முகிழ்ப்ப அகமெலாம் குழைந்து.', 'என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்தன்புருவாய் நிற்க அவந்தேன் பராபரமே.", :அன்பாற்கரைந்து கண்ணிர் ஆறுகண்ட அண்ணியருக்கு.", 'உள்ளம் குழைய உடல்குழைய உள்ளிருந்த கள்ளம் குழைய

பெ.-2-18