翌74 பெரிய புராண விளக்கம்-2
என்று காண்பேன் பராபரமே. என்று தாயுமானவரும் பாடியருளியவற்றைக் காண்க.
அடுத்து வரும் 125-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பாம்புப் புற்றைத் தான் எழுந்தருளும் இடமாகக் கொண்டிருக்கும் பழையவனை, திருவாரூர்ப் பூங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருப்பவனை, யாவருக்கும் பற்றுவதற் குரிய இடமாக விளங்கும் பரம் பொருளாக விளங்குபவனை, பார்வதியைத் தன்னுடைய வாமபாகத்தில் வைத்தருளி யிருப்பவனை, தாமரை மலரின்மேல் அமர்ந்திருக்கும் பிரம தேவன் தன்னை அருச்சனை செய்ய அவனுக்குத் திரு வருளை வழங்கிய தலைவனைத், தரையின்மேல் விழுந்து வணங்கி நல்ல செந்தமிழில் வல்லவராகியவரும் திருநாவ லூரில் திருவுவதாரம் செய்தருளிய அரசரும் ஆகிய சுந்தர மூர்த்தி நாயனார் இந்த மனிதத் திரும்ேனியால் பெற்ற பல வகையான நன்மைகளின் இயல்பை உண்மையாகப் பெறும் பேற்றை அடைந்தார். பாடல் வருமாறு: - புற்றிடம் கொண்ட புராதனனைப்
பூங்கோவில் மேய பிரானை யார்க்கும் பற்றிடம் ஆய புரம்பொருளைப்
பார்ப்பதி பாகனைப் பங்கயத்தான் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த
அண்ணகல மண்மிசை வீழ்ந்திறைஞ்சி கற்றமிழ் காவலர் கோன்உடம்பால்
கன்மையின் தன்மையை மெய்ம்மைபெற்றார். '
புற்று-பாம்புப் புற்றை. இடம்-தான் எழுந்தருளும் இடமாக, கொண்ட-கொண்டிருக்கும். புராதனனை-பழைய வினை, ப்: சந்தி. பூங்கோயில்-திருவாரூரில் உள்ள பூங் கோயில்ை. மேய-விரும்பி எழுந்தருளியு. பி ரான னதலைவனை யார்க்கும்-யாவருக்கும். பற்று-பற்றுக்கோ ட்ாகிய இடம் ஆய-இடமாக விளங்கிய. பரம்பொருள்ைஎல்லாருக்கும் மேலாக விளங்கும் செல்வத்தை ப்