தடுத்தாட்கொண்ட புராணம் 骂罗岳
போன்றவனை. ப்: சந்தி. பார்ப்பதி-பார்வதியை. பாகனைதன்னுடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்திருப்பவனை. ப்: சந்தி. பங்கயத்தான்-தாமரை மலர்மேல் அமர்ந்திருக்கும் பிரமதேவன். அர்ச்சனை-பழங்காலத்தில் அருச்சனை. செய்ய-புரிய அருள்-அவனுக்குத் தன்னுடைய திருவருலை. புரிந்த-வழங்கிய. அண்ணலை-தலைவனும் ஆகிய வன்மீக நாதனை. மண்மிசை-தரையின்மேல். வீழ்ந்து-விழுந்து. இறைஞ்சி-வணங்கி. நற்றமிழ்-நல்ல செந்தமிழில் வல்லவ ராகிய; ஆகுபெயர். நாவலர்-திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளியவராகிய, கோன்-அரசராகிய சுந்தர மூர்த்தி நாயனார்:ஒருமை பன்மை மயக்கம். உடம்பால்-தாம்பெற்ற மனிதத் திருமேனியால். நன்மையின் பெற்ற நன்மைகளி லுடைய ஒருமை பன்மை மயக்கம். தன்மையை இயல்பை. மெய்ம்மை-உண்மையாக. பெற்றார்-பெறும் பேற்றை அடைந்தார். -
புராதனன்: "காலமும் நாள்கள் ஊழி படையாமுன்ஏக உருவாகி.", "முந்தையார் முந்தி யுள்ளார்.", "முன்பின் முதல்வன்.', 'அலங்கல் சேர்சடை ஆதி புராணனை.’’, முன்னை ஞான முதல்தனி வித்தின்ை', "எல்லாம்முன் தோன்றாமே தோன்றினான்.", "முன்னே தானாம்.", "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி.", 'முந்தி இருந்தாயும் நீயே.', 'மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே.', 'முன்னவன் காண்.', 'முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி.', 'முன்பாகி நின்ற முதலே போற்றி.', 'ஆதி புராணனாய் நின்றாய் போற்றி.',
தான்ை.', 'முந்தைகாண்.', 'மூவ்ாது யாவர்க்கும் மூத்தான்." என்று திருநாவுக்கரசு நாயனாரும்,'முன்னவன் எங்கள் பிரான்.', 'முந்தியாகிய மூவரின்மிக்க மூர்த்தியை.', 'ழுன்னை நம்பி. என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "முன்னோன்.காண்க.", "சொற்பதம் கடந்த தொல்வோன் காண்க.', 'புரம்பல் எரித்த புராண போற்றி.'. "போற்றி