தடுத்தாட்கொண்ட புராணம் 277
இந்தப் பாடல் குளகம். அன்பு-சுந்தர மூர்த்தி நாயனார் பக்தி. பெருக-பெருகி எழ. உள்ளம்-தம்முடைய திருவுள்ளம். உருகி-உருக்கத்தை அடைந்து, அலைய-தடுமாற. அட்டாங்க -தலை, மூக்கு, வாய், மெய், இரண்டு காதுகள், மோவாய், இரண்டு முழங்கைகள், இரண்டு பாதங்கள் என்னும் எட்டு உறுப்புக்களும்; அங்க: ஒருமை பன்மை மயக்கம். பஞ்சாங்க மாக-தலை, இரண்டு கைகள், இரண்டு முழங்கைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள் என்னும் ஐந்து உறுப்புக்களும். அங்க: ஒருமை பன்மை மயக்கம். முன்புவன்மீக நாதருடைய சந்நிதியில், முறைமையினால்-வணங்க வேண்டிய முறையோடு; உருபு மயக்கம். வணங்கி-வன்மீக நாதரைப் பணிந்து. முடிவு-இறுதி. இலா-இல்லாத இடைக் குறை. காதல்-விருப்பம். முதிர-முதிர்ச்சியை அடைய. ஓங்கிசிறந்து நின்று. நன்-நல்ல. புலன்-இந்திரியங்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஆகிய-ஆக உள்ள. ஐந்தும்-மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்னும் ஐந்தும். ஒன்றி-ஒன்று பட்டு. நாயகன்-தலைவனாகிய வன்மீக நாதனுடைய, சேவடி-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடி களை ஒருமை பன்மை மயக்கம். எய்தப் பெற்ற அடையப் பெற்றதனால் உண்டாகிய, இன்ப-ப்ேரானந்த வெள்ளத். திடை-வெள்ளத்துக்குள். மூழ்கி-முழுகி. நின்று-சிறிது நேரம் அந்த வெள்ளத்தில் ஆழ்ந்து நின்று. ஏ: அசை நிலை. இன்இனிய இசை-உரிய பண் அமைந்ததும்; வினையாலணையும் பெயர். வண்-சொற்சுவை பொருட்சுவை எ ன் னும் வளப்பத்தைப் பெற்றதும்; வினையாலணையும் பெயர். தமிழ்-செந்தமிழ் மொழி. மாலை மாலையாகிய ஒரு திருப் பதிகத்தை பாட-அந்த நாயனார் பாடியருள்.
அப்போது காந்தாரப் பண்ணில் அந்த நாயனார் பாடி அயருளிய ஒரு பாசுரம் வருமாறு: - -
' கரையும் கடலும் மலையும் காலையும் -
மாலையும் எல்லாம்