பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பெரிய புராண விளககம்-2

உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர

. - லோகன் வரையின் மடமகள் கேள்வன் வானவர்

х . - தானவர்க் கெல்லாம். அன்ரயன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும்

- ஆள்வரோ கேளிர். '

ஐந்து புலன்களும் ஒன்றுதல்: "ஐம்புலனு மடக்கி ஞானம் புகலுடையோர்தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புர்ாணர்,”, “அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய். அநேக காலம் வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய

பரே தற்கு.', வென்றிலேன் புலன்கள் ஐந்தும்,”, “பொறிப் புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்து நின்ைந்தவர் சிந்தையுள் அறிப்புறும் மமுதாயவன்.” என்று திருநாவுக்கிரசு நாயனாரும், 'அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்முடி சேர்வறியா வஞ்சனை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "நன்புலன் ஒன்றி நாத என் றரற்றி.” என்று மர்ணிக்க வாசகரும், வென்றஐம் புலனால் மிக்கிர்.", என்று சேக்கிழாரும், புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம். என்று வேறு ஒரு புலவரும் பாடியருளி யிருப்ப வற்றைக் காண்க.

பிறகு உள்ள 127-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பெருமையைப் பெற்ற வேதமாகிய பாம்புப் புற்றைத் தர்ன் எழுந்தருளும் இடமாகக் கொண்ட அரசனாகிய வன்மீக நாதனுடைய அருமையாக விளங்கும் திருவருளால் ஒர் அசரீரி வாக்கு, நம்முடைய தோழனாக விளங்கும் தன்மையை அமையுமாறு உனக்கு எம்மை வழங்கினோம்;. நாம் முன்பு ஒரு நாள் உன்னைத் தடுத்து ஆட்கொண்டு எம்முடைய தொண்டனாக உன்னை ஏற்றுக்கொண்ட திருமணத்தில் அன்றைக்கு நீ புனைந்து கொண்டிருந்த மணவாளக் கோலத்தை என்றைக்கும் அணிந்து கொண்டு உன்னுடைய விருப்பம் நிறைவேறுமாறு இந்த மண்ணுலகத்