தடுத்தாட்கொண்ட புராணம் 279.
தின்மேல் நீ விளையாடலைப் புரிவாயாக' என நம்பி ஆரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார் கேட்கும் வண்ணம் ஆகாயத்தில் எழுந்தது. பாடல் வருமாறு: ~ *
வாழிய மாமறைப் புற்றி டங்கொள்
மன்னவன் ஆாரு ளாலோர் வாக்குத்
தோழமை ஆக உனக்கு நம்மைத் -
தந்தனம் காம்முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று கொண்ட கோலம் என்றும் புனைந்துகின் வேட்கை தீர
வாழிமண் மேல்விளை யாடு வாய்.” என் றாரூரர் கேட்க எழுந்த தன்றே. "
வாழிய: அசை திணை. மா-பெருமையைப் பெற்ற, மறைப்புற்று-வேதமாகிய பாம்புப் புற்றை, இடம்-தான் எழுந்தருளியிருக்கும் இடமாக. கொள்-கொண்ட மன்னவன் -அரசனாகிய வன்மீக நாதனுடைய. ஆரருளால்-அருமை யாக விளங்கும் திருவருளால். ஓர் வாக்கு-ஒர் அசரீரி வாக்கு. த்: சந்தி. தோழமை-நம்முடைய தோழனாக விளங்கும் பான்ம்ை. ஆக உனக்கு-உனக்கு உண்டாகும் வண்ணம். நம்மை-எம்மை. த், சந்தி. தந்தனம்-வழங்கினோம். நாம்யாம்.முன்பு-முன் ஒரு நாள். தொண்டு-உன்னைத் தொண்ட னாக, திணை மயக்கம். கொண்ட-தடுத்து ஆட்கொண்ட. வேள்வியில்-புத்தாரில் நடந்த உன்னுடைய திருமணத்தில். அன்று-அன்றைக்கு. நீ கொண்ட-நீ புனைந்துகொண்டிருந்த, கோலம் - மணவாளக் கோலத்தை. என்றும் - இனிமேல் என்றைக்கும். புனைந்து-அணிந்து கொண்டு. நின்-உன்னு: டைய வேட்கை-விருப்பம். ரே-நிறை வேறுமாறு. வாழி: அசை நிலை. மண்மேல் இந்த மண்ணுலகத்தின்மேல். விளையாடுவாய்-திருவிளையாடலை நடத்து வாயாக. என்று-என. ஆரூரர்-நம்பி ஆரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார். கேட்க-கேட்கும்படி. எழுந்தது-ஆகாயத்தில் எழுந்தது. அன்று, ஏ. இரண்டும் ஈற்றசை நிலைகள்.