தடுத்தாட்கொண்ட புராணம் 281
திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவ பாணி, கோபப் பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், கல்லாட தேவ நாயனார். இயற்றியருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம், கபிலதேவ' நாயனார் அருளிச் செய்த மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவ் பெருமான் திரு அந்தாதி, பரண்தேவ நாயனார் பாடியருளிய' சிவபெருமான் திரு அந்தாதி, இளம் பெருமான் அடிகள் இயற்றியருளிய சிவபெருமான் திருமும்மணிக் கோவை, அதிரா அடிகள் அருளிச் செய்த மூத்த பிள்ளையார் திரு மும் மணிக் கோவை, புட்டினத்துப் பிள்ளையார் பாடியருளிய, கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்ப, முடையார் திரு அந்தாதி. திருவொற்றியூர் ஒருபா ஒருபது, நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த திருநாரையூர், விநாயகர் திரு இரட்டை மணி மாலை, கோயில் திருப் பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திரு அந்தாதி, ஆளுடைய பிள்ளையார் தி ரு ச் சண் ைப விருத்தம், ஆளுடைய, பிள்ளையார் திருமும்மணிக் கோவை, ஆளுடைய பிள்ளை. யார் திரு உலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருத் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திரு. நாவுக்கரசு தேவர் திரு ஏகாதச மாலை என்பவற்றையும், செப்பேடுகளில் வரையச் செய்து, தியாகராஜப் பெருமானு, டைய சந்நிதியில் ஏற்றுவித்த அபய குலசேகர சோழ மாமன்னரும், அந்தப் பதினொரு திருமுறைகளுக்குப் பின் சேக்கிழார் நாயனார் பாடியருளிய பெரிய புராணத்தைப் பன்னிரண்டாம் திருமுறையாக அமைத்து அந்த நூலையும் செப்பேடுகளில் வரையச் செய்து, தியாகேசருடைய சந்நிதியில்' ஏற்றுவித்த அநபாயசோழச் சக்கரவர்த்தியும் அரசாட்சிய்ைப் புரிந்த தலைநகரம் இந்தத் திருவாரூர். சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்