பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பெரிய புராண விளக்கம்-2

தைப் பாடியருளிய தேவாசிரயன் என்னும் ஆயிரக்கால் மண்டபத்தையும், அந்த நாயனார் விருத்தாசலத்தில் மணி முத்த நதியில் இட்ட பொன்னைப் பரவை நாச்சியாருக்கு எடுத்து வழங்கிய கமலாலயம் என்னும் திருக்குளத்தையும் கொண்டது இந்தத் தலம். சுந்தர மூர்த்தி நாயனாருக்காகத், தியாகராஜப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சி யாரிடம் தூதுவராக எழுந்தருளிய சிறப்பைப் பெற்றது. இந்தத் தலம். 'அடியேற் கெளிவந்த துாதனை' என்று சுந்தர மூர்த்தி நாயனார் குறிப்பிடுவதைக் காண்க.

காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையைப் பெற்ற அந்த நாயனார், மீளா அடிமை. என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி, மற்றொரு கண்ணிலும், பார்வையைப் பெற்ற தலம் இது. சேரமான் பெருமாள் நாயனார் வந்து சுந்தர மூர்த்தி நாயனாரோடு நண்பரான திருத்தலம் இது. விறன்மிண்ட நாயனார், நமிநந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழி பட்டு முக்தியை அடைந்த தலம் இது. சப்த விடங்கத் தலங்களுள் முதலாவதாக விளங்குவது இந்தத் தலம். 'திருவாரூர்த் தேர் அழகு. என்பது ஒரு பழமொழி. திருவாரூரில் திருக்கோயில், திருக்குளம், செங்கழுநீர் ஓடை ஆகியவற்றுள் ஒவ்வொன்றும் ஐந்து ஐந்து வேலிகளாக அமைந்த சிவத்தலம் இது. அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித் திடம்கொண் டாரே' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. - - -

ஆடகேச்சுரம் என்னும் ஆலயம் திருக்கோயிலுக்குள் இருக்கிறது. அந்தக் கோயிலில் பிலம் ஒன்று கல்லினால் மூடப் பட்டிருக்கிறது. அந்தப் பிலம் வன்மீக நாதருடைய திருக் கோயிலுக்குத் தென்கிழக்குத் திசையில் உள்ளது. அதற்கு நாகபிலம் என்று பெயர். அதில் எழுந்தருளியிருக்கும் ஆடகேசுவரரைத் தரிசனம் செய்து இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் யாவரும் சுவர்க்க லோகத்தை அடைந்தமை