தடுத்தாட்கொண்ட புராணம் 283.
யால் அந்த உலகத்தில் இடம் இல்லாமற் போய்விட்டதை அறிந்த இந்திரன் அரதன சிருங்கம் என்னும் மலை ஒன்றால் அந்த நாக பிலத்தை அடைத்துவிட்டான் என்பது ஐதிஹ்யம்.
இந்தச் செய்தியைத் திருவாரூர்த் தலபுராணத்தால். தெரிந்து கொள்ளலாம்.
கமலாம்பாளுடைய சந்நிதி தனியாக இருக்கிறது. நீலோற்பலாம்பாள். அல்லியங்கோதை என்ற திருநாமங். களைக் கொண்ட அம்பிகையினுடைய சந்நிதியும் தனியாக. உள்ளது. மேற்குக் கோபுரத்துக்கு எதிரில் மாற்றுரைத்த பிள்ளையார் என்னும் விநாயகப் பெருமானுடைய ஆலயம். உள்ளது. தெற்குக் கோபுரத்துக்கு அருகில் பரவை நாச்சியா ருடைய திருக்கோயில் இருக்கிறது. மனு நீதிச் சோழனுடைய புதல்வன் தேரில் ஏறிச் சென்றதும், பசுமாட்டினுடைய கன்றுக்குட்டி தேர்ச் சக்கரங்களின்கீழ் அகப் பட் டு. இறந்ததும், தன்னுடைய புதல்வன்மேல் மனுநீதிச் சோழன் தன்னுடைய தேரை ஒட்டியதும் ஆகிய ஜதிஹ்யங்களைப் புலப்படுத்தக் கல்லினால் தேர் முதலியவை செய்து வைக்கப் பட்டுள்ளன. இவற்றைக் கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் பார்க்கலாம். கமலாலயம் என்னும் திருக்குளத்தின் நடுவில் ஒரு சிறிய திருக்கோயில் விளங்குகிறது. இந்தத் தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: -
' உயிரா வனமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியின் உருஎழுதி உயிரா வணம்செய்திட்டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி அயிரா வனமேறா தானே றேறி
அமரர்நாடாளாதே ஆரூர் ஆண்ட அயிரா வணமேனன் அம்மா னேநின் - -
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
புற்றிடம் கொண்டவர்: புற்றிடம் கொண்டான்." என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியதைக் காண்க.