பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!?84 பெரிய புராண விளக்கம்-2

பின்பு உள்ள 128-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த அசரீரி வாக்கைக் கேட்பதற்கு விரும்பியிருந்த வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் என்றைக்கும் அழிவு இல்லாதவனாகிய வன்மீக நாதனை வணங்கிவிட்டு. நின்று கொண்டே, அடியேனைத் தடுத்து ஆட்கொள்ளும் பொருட்டு எழுந்தருளிய வேதியனே, திருவாரூரில் விரும்பிக் கோயில் கொண்டருளிய அருமையான மாணிக்கத்தைப் போன்றவனே, வாளைப் போலவும் கயல் மீன்களைப் போலவும் அழகைக் கொண்ட கண்களைப் பெற்ற மங்கை யாகிய அல்லியங் கோதையை வாமபாகத்தில் எழுந்தருளச் செய்திருப்பவனே, அன்றலர்ந்த செந்தாமரை மலர்களைப் போன்ற தேவரீருடைய திருவடிகளை அடியேனுக்குப் பற்றுக் கோடாக இன்றைக்கு நாயைப் போன்ற அடியேனை ஒரு பொருளர்கத் திருவுள்ளத்தில் கொண்டு வழங்கியருளியது தேவரீருடைய பெரிய கருணை அல்லவோ?’ என்று அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: ' .

  • கேட்க விரும்பிவன் றொண்டர் என்றும்

கேடிலா தானை இறைஞ்சி கின்றே ஆட்கொள வந்த மறையவனே. - -

ஆரூர் அமர்ந்த அருமணியே, வாட்கயல் கொண்டகண் மங்கை பங்கா,

மற்றுன் பெரிய கருணை யன்றே நாட்கம லப்பதம் தந்த தின்று

காயினே னைப்பொரு ளாக." என்றார்.

கேட்க-அந்த அசரீரி வாக்கைக் கேட்பதற்கு. விரும்பிவிரும்பியிருந் த. வன்றொண்டர்-வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார். என்றும்-எந்தக் காலத்திலும். கேடு-அழிவு. இலாதானை-இல்லாதவனாகிய வன்மீக நாதனை: இடைக்குறை. இறைஞ்சி-தரையில் விழுந்து வணங்கிவிட்டு. நின்றே-பிறகு தரையில் விழுந்து எழுந்து