286 பெரிய புராண விளக்கம்-2
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி.', 'பிறவாதும் இறவாதும் பெருகி னானை.', 'கீழ்வேளுர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுவமர் கேடிலாரே...' என்று திரு நாவுக்கரசு நாயனாரும், மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை.”, “பிறவாய் இறவாய்.” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும்,'அழிவதும் ஆவதும் கடந்தாய்.', "அழிவிலா ஆனந்த வாரி. , 'தான்.அந்தம் இல்லான்,', 'முடியா முதலே.”, “அந்தம் இல் அமுதே' என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.
அருமனி: "அருமனியை.”, “திருமணியை.", "முத்தைச் செழுமணியை.”, “பெறற்கரிய மாணிக்கத்தை', 'இப் பொன்நீ இம்மணிc.', 'மணியானே.”, “ம ரு கல் உறையும் மாணிக்கத்தை.', 'கோலக் காவிற் குருமணியை.", துருத்தி மேய தூமணியை.', 'மணியே பொன்னே மைந்தா.','மஞ்சனே மணியுமானாய்.", "சீர்தரு மணியே.", 'முத்தினை மணியைப் பொன்னை.", "முத்தினை மணியைப் பவளத்தொளிர் தொத்தினை.', 'மணிக்குன்று பிறங்கிய என்னனை.”, 'திருமணியைத் தித்திக்கும் தேனை.", 'முத்தினை மனிதன்னை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், அருள்செய்யும் மணியான்.", "மாணிக்கத் தொத்தினை.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத் தவராய்.', 'மன்னே மாமணியே ம ழ பா டி யு ள் மாணிக்கமே.”, “அருமணியை முத்தினை.", "மாணிக்கத் தின் மலைபோல் வருவார்.', 'பொன்னினை மணியை.', மாசிலாமணியே மறைப்பொருளே." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'என்பொல்லா மணியே.', 'ஆடகச்சீர் மணிக்குன்றே.', 'கழுமணியே. ஏதா மணியே.’’, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.', 'மாசில் மணியின் மணிவார்த்தை' என்று மாணிக்க வாசகரும்பாடியருளிய வற்றைக் காண்க. - . . . . . . ‘. . . . . .