தடுத்தாட்கொண்ட புராணம் 28፶
அடுத்து உள்ள 129ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'சுந்தர மூர்த்தி நாயனார் என்று இவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுப் பல தடவைகள் வன்மீக நாதரைப் பணிந்து அவ்வாறு பணிந்ததனால் உண்டாகிய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியோடும் வெற்றியையும் ஆற்றலை தயும் உடைய இடபத்தைப்போல நடந்து சென்றுவிதிவிடங்கப் பெருமானாராகிய தியாகராஜருடைய சந்நிதிக்கு எழுந்தருளி அவரை வணங்கித் தோத்திரம் புரிந்து மகிழ்ச்சியை அடைந்து திருக்கோயிலை வலம் செய்துவிட்டுத் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளினார்; அந்த நாள் முதலாக வன்மீக நாதருடைய அடியவர்கள் யாவரும் அந்த நகய னாரைத் தம்பிரான் தோழர் என்றே வழங்கலானார்கள்.' பாடல் வருமாறு:
என்று பலமுறை யால்வ ணங்கி
எய்திய உள்ளக் களிப்பினோடும் வென்றி அடல்விடை போல்க டந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து,
திருமாளிகைவலம் செய்து போக்தார்: அன்று முதலடி யார்கள் எல்லாம்
தம்பிரான் தோழர்என்றே அறைந்தார்.
என்று-சுந்தர மூர்த்தி நாயனார் என்று இவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. பல முறையால்-பல தடவைகளாக. முறை: ஒருமை பன்மை மயக்கம். வணங்கிவன்மீக நாதரைப் பணித்து. எய்திய-அவ்வாறு பணிந்த தனால் தாம் அடைந்த உள்ள-தம்முடைய திருவுள்ளத்தில். க்: சந்தி. களிப்பினோடும்-மகிழ்ச்சியோடும். வென்றி-வெற்றி யையும். அடல்-ஆற்றலையும் உடைய் விடைபோல்-இட பத்தைப் போல. நடந்து-நடந்து சென்று. வீதி விடங்கப் பெருமான்-iதி விடங்கப் பெருமர்னாகிய தியாகராஜனு, டைய. முன்பு-சந்நிதிக்கு. சென்று-எழுந்தருளி. தொழுது