388 பெரிய புராண விளக்கம்-2
தியாகராஜரை வணங்கி. துதித்து-தோத்திரம் புரிந்து. வாழ்ந்து-பெருமகிழ்ச்சியை அடைந்து. திருமாளிகை-வன்மீக. நாதருடைய திருக்கோயிலை. வலம் செய்து-பிரதட்சினம். புரிந்து. போத்தார்-தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி னார். அன்று-அந்த நாள். முதல்-முதலாக அடியார்கள். வன்மீக நாதருடைய அடியவர்கள். எல்லாம்-யாவரும். தம்பிரான் தோழர்-சுந்தர மூர்த்தி நாயனாரைத் தம்பிரான் தோழர். என்றே-எனவே. அறைந்தார்-வழங்கலானார்கள்;
ஒருமை பன்மை மயக்கம். r
ஆடவருடைய நடைக்கு இடபத்தின் நடை உவம்ை: கமால்விடை யும்பொன் நாகமும் நாகமும் நாண நடந்: தான்." (கார்முகப் படலம், 32), விடைப்ொரு நடை யினான்." (எழுச்சிப் படலம், 10), “நடையை இழிவான மல்லல் ஏற்றின் உளதென்றால்.” என்று கம்ப. ராமாயணத், தில் வருவனவற்றைக் காண்க.
பிறகு உள்ள 180-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மையைப் போன்ற கருமை நிறம் வளருகின்ற கழுத்தை உடையவராகிய வன்மீக நாத்ர் வழங்கிய திருவருளினால் சொற்கவை பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ்மொழியில் வல்லவராக விளங்கும் திருநாவலூரில் வாழ்பவர்களுடைய தலைவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் சைவ சமயத்தினர்களுக்குரிய அழகான அலங்காரத்தை அணிந்து கொண்டும், சந்தனத்தைப் பூசிக்கொண்டும், உருத். 'திராக்க மாலையையும் மலர் மாலையையும் பூண்டவராகித் தம்முடைய திருமேனியில் அணிந்து கொண்ட கோலம் முழுவதும் விளங்க, மிகுதியாகவும் மேம்பாட்டைப் பெற்ற தாகவும் அமைந்த தவத்தைப் புரிந்த அரசர் என்று கூறும் வண்ணம் தெய்வத் தன்மையைப் பெற்றதும் அழகியதும் ஆகிய பாம்புப் புற்றில் எழுந்தருளியிருக்கும் வன்மீக நாதரைத் திருப்பதிகங்களால் பாடியருளி ஆனந்த சாகரத் தில் முழுகி இன்புற்று மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரலானார். பாடல் வருமாறு: