பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 289

மைவளர் கண்டர் அருளி னால்ே

வண்டமிழ் காவலர் தம்பெருமான் சைவ விடங்கின் அணிபு னைந்து

சாந்தமும் மாலையும் தாரும் ஆகி மெய்வளர் கோலம்எல் லாம்பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்னத் தெய்வ மணிப்புற்றுளாரைப் பாடித்

திளைத்து மகிழ்வொடும் செல்லா கின்றார். '

மை-மையைப் போன்ற கருமை நிற ம். வளர். வளர்கின்ற. கண்டர்-கழுத்தை உடையவராகிய வன்மீக நாதர். அருளினால்-வழங்கிய திருவருளினால். ஏ: அசை நிலை. வண்-சொற்சுவை பொருட்கவை என்னும் வளப்பத் தைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் வல்லவராக விளங்குபவரும்; திணை ம ய க் க. ம். நாவலர்தம்-திரு நாவலூரில் வாழும் மக்களுடைய்: ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. பெருமான்-தலைவரும் ஆகிய சுந்தர மூர்த்தி நாயனார். சைவ-சைவசமயத்தைச் சார்ந்தவர் களுக்கு உரிய திணை மயக்கம். விடங்கின்-அழகைப் பெற்ற. அணி-அலங்காரத்தை. புனைந்து-அணிந்து கொண்டு. சாந்தமும்-சந்தனமும், மாலையும்-உருத்திராக்க மாலையும். தாரும்-மலர் மாலையும். ஆகி-பூண்டவராகி, மெய்-தம்மு டைய திருமேனியில். வ்ளர்-வளரும். கோலம் எல்லாம்கோலம் முழுவதும். பொலிய-விளங்க. மிக்க-மிகுதியானதும்; வினையாலணையும் பெயர். விழு-மேன்மையைப் பெற்றது மாகிய, வினையாலணையும் பெயர். த், சந்தி. தவ:தவத்தைப் புரிந்த, வேந்தர்-அரசர். என்ன-என்று கண்டவர் கள் வியக்கும் வண்ணம். த், சந்தி. தெய்வ-தெய்வத் தன்மையைப் பெற்ற, மணி-அழகிய ப்: சந்தி. புற்று-பாம்புப் புற்றில். உளாரை-எழுந்தருளியிருப்பவராகிய வன்மீக நாதரை இடைக்குறை. ப்: சந்தி. பாடி-பல திருப்பதிகங் களைப் பாடியருளி, த்: சந்தி. திளைத்து-ஆனந்த சாகரத்தில் முழுகி இன்புற்று. மகிழ்வொடும்-பெரு மகிழ்ச்சியோடும்.

பெ.--2-19