290- பெரிய புராண விளக்கம்-2
செல்லாநின்றார்-வாழ்க்கையை ந ட த் தி க் கொண்டு போகிறவர் ஆனார்.
மைவளர் கண்டர்:"மையுள் நஞ்சம் மருவு மிடற்றாரே.', மைசேர் கண்டர்.', 'மையார் கண்டன்.', 'மைசேர் கண்டத் தெ ன் டோ ள் முக்கண் மறையோனே.”, “மையுடைய மர மிடற் றண்ணல்.’’, 'மையணி மிடறுடை மறையவன்.', 'மைகொள் கண்டத் தெண்டோள் முக்க னான்.', 'மைதவழும் மாமிடறன்.', 'மையுலா மணி மிடற்றான்.', 'மையினார் மணிபோல் மிடற்றனை.", 'மையார் மணிமிடறன்.', 'மையி லங்கொளி மல்கிய மாசி லாமணி மிடறினார்.', 'மைகொள் கண்டத்தெம் பெருமான்.', 'மையணி மிடறுடை மறையவனே.", 'மையணி கண்டனார்.', 'மையினார் மிடறினார்.", 'மைகொள் கண்டத்தர்.', 'சீர்மை கொள்கண்டன்.", “மையணி மாமிடற்றான்.', 'மை திகழ்தரு மாமணி. கண்டனே..' என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், மைஞ்ளுவில் கண்டன்.', 'மையணி கண்டத் தானே. , “மையணி கண்டன் மறைவிரி நாவன்.', மைகொள் கண்டன் எண்தோளன்.', 'மைகொள் கண்டத்த ராகி.", மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.', 'மைய னுக்கிய கண்டனை., 'மைகொள். கண்டத்தன் மான்மறிக் கையினான்.', 'மைகொள் மணிமிடற்று வார்சடையான்.',' "மைவான மிடற்றானை.', "மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி.', 'மையாரும் மணிமிடற்றாய்.", மையாரும் கண்ட மிடற்றார்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், மைகொள் கண்டன் எண்டோளன் முக் கண்ணன்.', 'மையாரும் மிடற்றாய்., 'மையார் கண்டத் தினாய்.”, மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்.', “மையனை மையணி கண்டனை.”, 'மான்மறி ஏந்தும் மைகொள் கண்டனை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'விடமுண் மிடற்று மையவனே.', 'மையமர் கண்டனை வான நாடர் மருந்தினை." என்று மாணிக்க வாசகரும்,