பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பெரிய புராண விளக்கம்-2

விளங்கும். கயிலைகயிலாய மலையில் எழுந்தருளியிருக்கும். ஆதி-எல்லாத் தேவர்களுக்கும் முதலில் தோன்றிய. முதல் வர்தம்-முதல் தேவராகிய கைலாச பதியாருடைய. தம்: அசை நிலை. பங்கினாட்கு-வாமபாகத்தில் எழுந்தருளி யிருக்கும் பார்வதி அம்மைக்கு. ப்: சந்தி. பொதுக் கடிந்துபொதுவாக இருப்பதை விட்டுச் சிறப்பாக இருந்து. உரிமை அந்த அம்மைக்கு உரிய பணிகளை ஒருமை பன்மை மயக்கம். செய்யும்-புரிந்து வரும். பூங்குழல்-மலர்களை அணிந்த கூந்தல்களைப் பெற்ற, பூ ஒருமை பன்மை மயக்கம். குழில்: ஒருமை பன்மை மயக்கம். சேடிமாரில்-தோழிமார்களுக்குள், கதிர்த்த-ஒளியை வீசிய பூண்-அணிகலன்களை ஒருமை பன்மை மயக்கம். ஏந்து-தாங்கும். கொங்கை-நகில்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கமலினி-கமலினி என்னும் தோழி. அவதரித்தாள்-திருவவதாரம் செய்தருளி' னாள்.

பூண் ஏந்து கொங்கை: 'இழைவளர் தருமுலை மலைமகள்.", "போகம் ஆர்த்த பூண்முலையாள்.', 'பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'இலகு பூண்முலை.”, (நகரப் படலம், 2.) 'இழை'குலா, முலையி எாளை.' (கோலங்காண் படலம், 20) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க. "இலைப்பூண் கவை இலைப் புறம் புதைஇப் பொற்கொடி யிழையொடு நற்குடன் தாழ.', இலைப்பூண் திளைக்கும் ஏந்திள முலையள்.', 'நின் பூனிள வனமுலை." (பெருங்கதை 2, 4. 119-20, 3.5, 22: 17) என்று கொங்கு வேளிர் பாடியவற்றையும் காண்க.

அடுத்து உள்ள132-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ஒளியை வீசும் ஒரு மாணிக்கம் பிறந்திருக்கிறது என்று சொல்லும் வண்ண்ம் உருத்திர கணிகைகளாகும் கணவர்கள் இல்லாத பரத்தையர்களின் குடும்பத்தில் பிறந்து பரவை யார் என்னும் திருநாமத்தை விதிப்படி விளக்கத்தோடு