தடுத்தாட்கொண்ட புராணம 295
'துாயார் சுடுபொடி ஆடிய மேனியர்.', 'துரயவர் கண்ணும் வாயும் மேனியும்.', 'புனிதனைப் புலித்தோல் உடை யானை.', 'தூய சோதியை.', 'பூத நாதனே புண்ணியா புனிதா.’’ என்று சுந்தர மூாத்தி நாயனாரும், தூய மேனிச் சுடர்விடு சோதி. , 'துப்பனே தூயாப்.', 'பொருளனே புனிதா.’’ என்று மாணிக்க வாசகரும்பாடியருளியவற்றைக் 5TడáT& ,
சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை: 'ஆதியன் ஆதிரையன்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், ஆதி நாயகன் ஆதிரை நாயகன்,' என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கரிய சோதியன்." என்று சுந்தர மூர்த்தி க்ாயனாரும், 'மதிகனலி என்றிவற்றை, முன்னம் படைத்த முதல்வனை இன்னம், ஆர்திரையான் ஆர்திரைகான் என்றென் றயருமால், ஊர்திரைநீர் வேi உலகு." என்று முத்தொள்ளாயிரம் பாடிய ஆசிரியரும் பாடிகருளியவற்றைக் காண்க.
பின்பு வரும் 133-ஆம் பாடலின் கருத்து வருமாது:
'பரவையாருக்குத் தெய்வத்தைத் துதித்துக் கைகளிலும் கால்களிலும் காப்புக்களை அணிந்து பாதுகாத்துப் பழகு கின்ற பெரிய உறவினர்கள் ஒவ்வொரு மாதமும் வளர்ந்து வந்த பருவம் ஒவ்வொன்றிலும் உரிய விழாவை நடத்தி அலங்காரங்களை எடுப்பாகச் செய்ய அறிவில் சிறந்து நிற்கும் சான்றோர்கள், மேன்மையான செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மங்கையாகிய திருமகளே இந்தக் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள்' என்று கூறித் தங்களுடைய உள்ளங்கள் உண்டாக்கி எழுந்த பெருமகிழ்ச்சி பொங்கி எழப் பரவையார் தளர்நடை நடக்கும் பருவத்தை அடைந் தார். பாடல் வருமாறு: