பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 296 பெரிய புராண விளக்கம்-2

பரவினர் காப்புப் போற்றிப்

பயில்பெரும் சுற்றம் திங்கள் விரவிய பருவங் தோறும்

விழாஅணி எடுப்ப மிக்கோர் வரமலர் மங்கை இங்கு,

வந்தனள்,' என்று சிங்தை தரவரு மகிழ்ச்சி பொங்கத்

தளர்நடைப் பருவம் சேர்ந்தார். ' பரவினர்-சான்றோர்கள் குலதெய்வத்தைத் துதித்து; முற்றெச்சம். காப்பு-பரவையாருடைய கைகளிலும் கால் களிலும் காப்புக்களை ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. போற்றி அணிந்து பாதுகாத்து. ப்: சந்தி. பயில்-பழகிய. 'பெரும் பெரிய சுற்றம்-உறவினர்கள்; திணை மயக்கம். திங்கள்-ஒவ்வொரு மாதமும். விரவிய-வளர்ந்து வந்த. பருவம் தோறும் ஒவ்வொரு பருவத்திலும். விழா-விழாவை நடத்தி. அணி-அலங்காரங்களை ஒருமை பன்மை மயக்கம், எடுப்பஎேடுப்பாகச் ச்ெய்ய. அந்த அலங்காரங்களாவன: சுட்டி அணிதல், காதுகளுக்குத் தோடுகளை அணிதல், மாட்டல் பூட்டல், ஜிமிக்கிகளை அணிதல், வங்கியை அணிதல், ஒட்டியாணத்தை அணிதல், பட்டுப் பாவாடையை உடுத்தல், பட்டு அங்கியை அணிதல் முதலியவை. மிக்கோர்அளவிற் சிறந்த சான்றோர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வரம்-மேன்மையான. மலர்-செந்தாமரை மலரில் வீற்றி ருக்கும். மங்கை-மங்கையாகிய திருமகளே. இங்கு-இந்தக் குடும்பத்தில். வந்தனள்-வந்து பிறந்திருக்கிறாள். என்றுஎன்று கூறி. சிந்தை-தங்களுடைய உள்ளங்கள் ஒருமை பன்மை மயக்கம். தர-வழங்க. வரு-உண்டாகிய. மகிழ்ச்சிஆனந்தம். பொங்க-பொங்கி எழும் வண்ணம். த், சந்தி. தளர் நடை-தளர் நடை நடக்கும். ப்: சந்தி. பருவம்-பருவத்தை. சேர்ந்தார்-பரவையார் அடைந்தார். -

பிறகு வரும் 184-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பரவையாரைப் பார்த்தவர்கள், இந்தப் பெண் குழந்தை இளைய பெண் மான் கன்றோ? தெய்வத் தன்மை