தடுத்தாட்கொண்ட புராணம் 297
வளரும் இளமையான அரும்போ? நறுமணம் கமழும் தேனினுடைய இளம் பதமான நிலையோ? சமுத்திரத்தில் வீசும் அலைகளின் மேல் மிதக்கும் நறுமணம் கமழும் இளம் பவளக் கொடியோ? நிலா வீசும் இளைய பிறைச் சந்திரனு னுடைய கொழுந்தோ? மன்மதன் தன்னுடைய இளைய பருவத்தில் கற்றுக் கொள்ளும் ஒப்பற்ற இளமையான வில்லாகிய கரும்போ?’ என்று வியக்க. பாடல் வருமாறு: மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத் தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் புவள வல்லிக் காணிளம் கொடியோ? திங்கட்
கதிரிளங் கொழுந்தோ? காமன் தானிளம் பருவம் கற்கும்
தனி இளம் தனுவோ? என்ன. :
இந்தப் பாடல் குளகம். மான் இளம் பிணையோஇந்தப் பெண் குழந்தை இளைய பெண்மான் குட்டியோ. தெய்வ-தெய்வத் தன்மையைப் பெற்ற வளர்-வளரும். இள-இளைய முகையோ-தாமரை அரும்போ. தாமரை மலர் தெய்வத் தன்மையை உடையது: தெய்வத் தாமரைத் திருமக்ட் கெடுத்தோர்.” ( 34; 149) என்று பெருங்கதையில் வருவதைக் காண்க. வாச-நறுமணம் கமழும். த், சந்தி, தேன்-தேனினுடைய.இளம் பதமோ-முற்றி விளையாத இளமையான பதமோ. வேலை-சமுத்திரத்தில் வீசும். த், சந்தி. திரை-அலைகளின்மேல் மிதக்கும்; ஒருமை பன்மை மயக்கம். இளம்-இளைய. பவள வல்லி-பல்ளக் கொடியினுடைய. க், சந்தி, கான்-காட்டில் உள்ள இளம் கொடியோ-இளமையான பூங்கொடியோ. திங்கள்-சந்திரனு டைய. கதிர்-நிலாவின். இளம் கொழுந்தோ-இளமையான கொழுந்தோ .காமன்தான்-மன்மதன். தான்: அசை நிலை. இளம் பருவம்-தன்னுடைய இளமைப்பருவத்தில். கற்கும்எய்யப் பழகும். தனி-ஒப்பற்ற இளம்-இளம் பருவத்தில்