298 பெரிய புராண விளக்கம்.:
உள்ள. தனுவோ-வில்லாகிய கரும்போ. என்ன-என்று பரவையாரைப் பார்த்த மக்கள் வியப்பை அடைய.
மகளிருக்கு மான் உவமை: 'மங்கை வாணுதல் மான்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மானினம் வருவ போன்றும்.மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த் 'தார்.' (உலாவியற் படலம் 1), மடந்தையை மானை எடுக்கும் ஆனையேபோல் தடங்கைகாண் கொண்டு தழிஇ எடுக்கலுற்றான்.','பெண்னே வண்மைக் கேகயன் மானே.” (கைகேசி சூழ்வினைப் படலம், 3, 28), மங்கையர்க்கு விளக்கன்ன மானையும்.’’, (கங்கைப் படலம், 16), "சிற்றிடைச் சீதை என்னும் மான். (மாரீசன் வதைப் படலம், 79), "மான்.அவள் உரைத்த வோடும்.” (சடாயு உயிர் நீத்த பட்லம், 57), சனகன் மானை." (கார்காலப் படலம், 14), "மானை நாடுதல் புரிஞர்." (மராமரப் படலம், சி), 'வல்லியம் மருங்கு கண்ட மானென மறுக்க முற்று மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினாள்.' (மாயா சனகப் படலம், 18) என்று கம்பராமாயணத்தில் வருவனவற்றைக் காண்க. 'மானமர் பிணையின் மம்மர் எய்தி. (1. 56:29) என்று பெருங்கதையிலும் எஃகெறி பிணையின் மாழ்கி இறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள்.” (299) என்று சீவக. சிந்தாமணியிலும் வருவனவற்றைக் காண்க.
பிறகு உள்ள 185-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'பரவையார் என்னும் பெண் குழந்தை யாவரும் விரும்பும் தோற்றப் பொலிவும் அழகு வாய்த்தலும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை அடைந்து பொங்கி எழ, விளையாடுகின்ற மெல்லிய கழங்கும், பந்தும், அம்மனையும், ஊசலாடுவதும் இத்தகைய விளையாட்டுக்களின் போது பாடுகின்ற இனிய இசைப் பாடல்களும் தங்களுடைய தலைவியாகிய இமய மலை அரசனுடைய புதல்வியும் பூங் கொடியைப் போன்றவளும் ஆகிய பார்வதி தேவியினுடைய திருவடிகளில் தன்னுடைய திருவுள்ளத்தில் கூடியிருக்கும்.