22 - பெரிய புராண விளக்கம்-2
கதிரவன்-கிரணங்களை வீசும் சூரியன். கதிர்:ஒருமை பன்மை மயக்கம். உதயம் செய்தான்-கீழ் வானத்தில் உதயம் ஆனான்.
பிறகு வரும் 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு: -
'திருமணம் புரியும் நாள் அன்று காலை நேரத்தில் புரிய வேண்டிய காரியங்களை நிறைவேற்றி விட்டுச் சோதிட சாத்திரத்தில் வல்ல புலவராகிய சோதிடர் கூறிய வேளை வந்து சேர்வதற்கு முன்னால் வேதவிதிப்படி திருமணக் கோலத்தைக் கொள்ளும்பொருட்டுப் பூனூல் ஆடி விளங்கும் திருமார்பையும், நுட்பமாகப் பல நூல்களை அறிந்தவர்கள் வாயிலாய்க் கேட்ட கேள்வியைப் பெற்ற மேம்பாட்டையும் உடைய சுந்தர மூர்த்தி மனமாலையும், வேறு மாற்று மாலைகளும் பொங்கி மணத்தை வீசத் திருமஞ்சன சாலை யில் நுழைந்தான்." பாடல் வருமாறு:
- காலைசெய் வினைகள் முற்றிக்
- கணிதநூற் புலவர் சொன்ன வேலைவந் தணையும் முன்னர்
விதிமணக் கோலம் கொள்வான் நூலசைங் திலங்கு மார்பின்
நுணங்கிய கேள்வி மேலோன் மாலையும் தாரும் பொங்க
மஞ்சன சாலை புக்கான்.”
காலை-திருமணம் புரிந்து கொள்ளும் நாள் அன்று காலை நேரத்தில். செய்:புரிய வேண்டிய. வினைகள்காரியங்களை. முற்றி-நிறைவேற்றி விட்டு. க்:சந்தி. கணிதசோதிட நூல்- சாத்திரத்தில் வல்ல. புலவர்-புலவராகிய சோதிடர். சொன்ன- குறிப்பிட்டுக் கூறிய வேலை-வேளை. வந்து அணையும்-வந்து சேர்வதற்கு. முன்னர்-முன்னால். விதி-வேதம் விதித்த விதியின்படி. மணக்கோலம்- திருமணக் கோலத்தை. கொள்வான்-கொள்ளும் பொருட்டு. நூல்