தடுத்தாட்கொண்ட புராணம் 30 i.
பருவத்தை. நீங்கி-கடந்து. அள்ளுதற்கு-அள்ளிக் கொள்ளுவ தற்கு. அமைந்த-ஏற்றபடி பொருந்திய. பொற்பால்தோற்றப் பொலிவோடு; உருபு மயக்கம். அநங்கன்-அங்கம் இல்லாதவனாகிய மன்மதனுடைய. மெய்-உண்மையான. த்: சந்தி. தனங்கள்-செல்வங்கள். ஈட்டம் கொள்ள-குவிய லாக வந்து சேர. மிக்கு-மிகுதியாகி. உயர்வ-உயரமாக உள்ளவை. போன்ற-போல விளங்கிய கொங்கை-தம்முடைய நகில்கள்; ஒருமை பன்மை மயக்கம். கோங்கு-கோங்கில வினு டைய. அரும்பை-மொட்டுக்களை ஒருமை பன்மைமயக்கம். வீழ்ப்பதம்முடைய அழகால் தோல்வியை அடையும வண்ணம் செய்ய, உள்ள-தம்முடைய திருவுள்ளத்தில் உள்ள. மெய்-உண்மையான.'உள்ளத்தின் தன்மையும் திருமேனியின் தன்மையும் எனலும் ஆம். த், சந்தி. தன்மை-இயல்பு. முன்னை-இந்த உலகத்தில் தாம் பிறப்பதற்கு முன் இருந்த. உண்மையும்-பார்வதி தேவியாருடைய சேடி என்னும் உண்மையான இயல்பும். தோன்ற தோன்றுமாறு. உய்ப்பார். -தம்முடைய வாழ்க்கையை நடத்தி வரலானார்.
கொங்கைக்குக் கோங்கரும்பு உவமை: 'கோங்கன்ன குவிமுலையாள்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'பொன்னிறக் கோங்கின் பொங்கு முகிழ்ப் பென்ன, முன்னர் ஈன்ற முலை.', 'கோங்கரும் பேய்ப்ப முகிழ்த்தல் முன்னிய முலை.’, ‘கருங்கண் வெம்முலை அரும்பின் அழித்து...கோங்கம் குறுகல் செல்வார்.', (1. 41, 64-5, 46; 224-5, 2. 12:102-5) என்று பெருங்கதை யிலும்,கேர்ங்கின், குவிமுகிழ் இளமுலை.'(திருமுருகாற்றுப் படை, 3.4-5,) யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப், பூணகத் தொடுங்கிய வெம்முலை." (சிறுபாணாற்றுப்படை, 25-6), முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்.' (குறுந்தொகை 554:2), முதிர்கோங்கின் முகையென. பெருத்தநின் இளமுலை.” (கலித்தொகை, 56; 23-4), 'கோங்குமுகைத் தன்ன குவிமுலை." (அகநானூறு, 240:11),