*02 பெரிய புராண விளக்கம்-2
"கோங்கின், மு கை வன ப் பெய்திய இளமுலை." (புறநானூறு 386:9-10), யாணர்க் கோங்கின் குவிமுகை எள்ளிப், பூனகத் தொடுங்கு முலை." (ஞானாமிர்தம்.) "யாணர்க் கோங்கின் மென்முகிழ் முலை.' (பாகவதம், 10, கோலியர். 13) என்று வருவனவற்றைக் காண்க.
பிறகு உள்ள 137-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'பரவையார் தம்முடைய தோழிமார்கள் தம்முடைய பக்கத்தில் சுற்றி வரவும், படர்ந்து வீசும் திருமேனியின் பிரகாசம் தெருவில் சுற்றி வீசவும், தேன் கமழும் தம்முடைய கூந்தலின் நறுமணம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் திசைகளிலெல்லாம் போய்ச் சுற்றி மணக்கவும், உயரமாக விளங்கும் திருவாரூர்ப் பூங்கோயிலில் எழுந்தருளி யவரும் ஒப்பற்றவருமாகிய வன்மீக நாதரைப் பக்தியோடும் அவருடைய விரக்கழலைப் பூண்டவையும், செந்தாமரை மலர்களைப் போன்றவையும் ஆகிய திருவடிகளைப் பணியும் பொருட்டு என்றைக்கும் போகிறவராகிய அந்தப்பரவையார் அந்த வழக்கப்படி ஒரு நாள் பூங்கோயிலுக்கு எழுந்தரு னார். பாடல் வருமாறு:
பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத் தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம்
சென்று சூழ ஓங்குபூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி -
-- னோடும்
ாட் . போக்தார்.
பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு க
பாங்கியர்-பரவையார் தம்முடைய தோழிமார்கள். மருங்கு-தம்முடைய பக்கத்தில். சூழ-சுற்றி வரவும். ப்: சந்தி. படர்-படர்ந்து வீசும். ஒளி-தம்முடைய திருமேனியின் பிரகாசம். மறுகு-தெருவில் சூழ-சுற்றி வீசவும். த், சந்தி. தேம்-தேன். கமழ்-கமழும். குழலின்-தம்முடைய கூந்தலின்.