306 பெரிய புராண விளக்கம்-2
மயக்கம், அரவு-பாம்புகள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். உலகை-நாக லோகத்தை வென்ற-வெற்றி பெற்ற துணிவுதுணிவை. கொண்டு-மேற்கொண்டு. ஆர்ப்ப-பேரொவியை. எழுப்பவும். மஞ்சு-மேகம். சுரி-நெளிகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். குழற்கு-அவருடைய கூந்தலின் கருமைக்கு. அழிய-தோல்வியைப் பெறவும். இன வண்டு. அந்தக் கூந்தலில் மொய்க்கும் வண்டுகளின் கூட்டம். வண்டு: ஒருமை பன்மை மயக்கம். விண்ணும்-தேவ லோகத்தில் வாழும் தேவர்களும்; இட ஆகுபெயர். பணியும்-இவரை வணங்குவார்கள்; திணை மயக்கம். என்று-என்று தெரிவிப்ப தைப் போல. ஆர்ப்பர்ங்காரம் செய்ய, ப்: சந்தி.
பெண் குறிக்குப் பாம்பு உவமை: "நாகபனம் திகழ் அல்குல் மல்கு...மங்கை', 'பையார் அரவே ரல்குலா ளொடும்.', 'படஅர வேரல்குள் பல்வளைக்கை மடவர லாளை.', 'பணம்கொள் ஆடர வல்குல் நல்வார்.’’, பைய் ராவரும் அல்குல் மெல்லியல்.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பையர வசைத்த அல்குல்.”, பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடியாள்.',படவேரரவல்
குற் பாவை நல்லீர்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும்,
'பொங்கரா அல்குற் செவ்வாய்...மங்கை.', பைந்நாப் படவர வோல்குல் உமை." என்று மாணிக்க வாசகரும், "அங்கர வல்குல் நங்கைக்கு.', 'அரவணி அல்குல் துகில்
நெறி திருத்தியும்.' (பெருங்கதை, 1, 42:137, 4. 12, 232) என்று கொங்கு வேளிரும், "அரவுவெகுண் டன்ன அல்குல்.” (சீவக. சிந்தாமணி, 1878) என்று திருத்தக்க தேவரும் பாடி யருளியவற்றைக் காண்க.
பெண்மணிகளும் சிலம்புகளை அணிதல்: சிலம்பு கலந்தார்ப்ப. (திருவாசகம்) என்று மாணிக்க வாசகரும், "பெதும்பை மகளிர் சிலம்பொலி அரவமும்.', 'சிலம்பொலிச் சீறடி.....வாசவ தத்தை.' (பெருங்கதை, 1, 41: ச8, 2. 2: 47-9) என்று கொங்கு வேளிரும், இன்னரிச் சிலம்போ