308. பெரிய புராண விளககம்-2
புற்று-திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள பாம்புப் புற்றை. இடம்-தாம் எழுந்தருளும் இடமாக, விரும்பினாரை-விரும்பி ஏற்றுக்கொண்டவராகிய வன்மீக நாதரை. ப்: சந்தி. போற்றினர்-வாழ்த்தி; முற்றெச்சம். தொழுது-வணங்கி விட்டு. செல்வார்-தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளு பவராகிய பரவையாரை. சுற்றிய தம்மைச் சுற்றி உள்ள. பரிசனங்கள்-பரிவார மக்கள். சூழ-தம்மைச் சூழ்ந்து வர. ஆளுடைய நம்பி-ஆளுடைய நம்பியாகிய சுந்தர மூர்த்தி நாயனார். நல்-நல்ல. பெரும்-பெருமையைப் பெற்ற. பான்மை-ஊழின் தன்மை. கூட்ட-கூடச் செய்ய, நகைபுன்முறுவல். பொதிந்து-அமைந்து. இலங்கு-விளங்கும். செவ்வாய்-சிவந்த இதழ்களைப் பெற்ற வாயையும். விற் புரை-வில்லைப் போன்ற, நுதலின்-நெற்றியையும். வேல்வேலாயுதங்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். கண்-கண்களையும்; ஒருமை பன்மை மயக்கம். விளங்குதங்கத்தால் செய்யப் பெற்ற ஒளியை வீசிக்கொண்டு பொலியும். இழையவரை-அணிகலன்களையும் பெற்றவ ராகிய அந்தப் பதியிலாரை. இழை: ஒருமை பன்பை மயக்கம். க், சந்தி. கண்டார்-பார்த்தார்.
மகளிருடைய நெற்றிக்கு வில் உவமை: "வில்லியல்
நன்னுதலார்.” என்று மாணிக்க வாசகர் பாடியருளியதைக் காண்க. 'விற்கொண்ட வாணுதலாள் வேலி' என்று கம்பர் பாடியிருப்பதைக் காண்க. -
மகளிர் கண்ணுக்கு வேல் உவமை: "வேலொண் கண்ணியி னாளை.', 'வேலன கண்ணி மார்கள்.”, “வேவின் உருவேறு கண்ணி.', 'வேலன கண்ணியொடும்.', 'வேலு மன கண்ணியொடு.', 'வேல்நிகர் கண்ணியர்.', 'வேலி
னேர்தரு கண்ணி னாள்உம்ை." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "வேலை வென்ற கண்ணாரை.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'வேலங்காடு தடங்கண்ணார்.” என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "முழுதயில் வேற் கண்ணியர்.” என்று மாணிக்க வாசகரும், வென்வேல்