பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 309

கடுக்கும் வெம்மை நோக்கத்து.', 'மாறம் வேற்கண் வாச வதத்தை.', 'செருவேல் பழித்த சேயரி நெடுங்கண்.'" (பெருங்கதை, 1. 42: 53, 2, 14: 138, 15: 85) என்று கொங்குவேளிரும், இணைவே லுண்கண்..' (சீவகசிந்தா மணி, 455) என்று திருத்தக்க தேவரும் பாடியருளியவற்றைக் காணக.

அடுத்து உள்ள 140-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு பரவையாரைப் பார்த்த சுந்தர மூர்த்தி நாயனார், "இந்தப் பெண்மணி தேவலோகத்தில் வளர்ந்து நிற்கும் கற்பக மரத்தில் உள்ள மலர்கள் மலர்ந்த கொம்போ? மன்மதனுக்குப் பெரிய வாழ் ைவ வழங்குபவளோ? சிறப்பைப் பெற்ற புண்ணியச் செயல்களைப் புரிந்த புண்ணியத்தின் பயனோ? மேகத்தைத் தலையில் தாங்கி வில்லும் கருங்குவளை மலாகளும் பவளமும் மலர்ந்த சந்திரனை மலரச் செய்த நறுமணம் கமழும் பூங்கொடியோ? அற்புதமான வடிவமோ? சிவ பெருமானுடைய திருவருளோ? இன்னது என்று நான் தெரிந்து கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறேன்” என்று எண்ணி வியப்பை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு:

கற்பகத்தின் பூங்கொம்போ? காமன்றன்

பெருவாழ்வோ? பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?

- . புயல்கமங்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்

. . . கொடியோ? அற்புதமோ? சிவனருளோ? அறியேன். ' -

என் றதிசயித்தனர். ' கற்பகத்தின்-அவ்வாறு பரவையாரைப் பார்த்த சுந்தர மூர்த்தி நாயனார், இந்தப் பெண்மணி தேவலோகத்தில் வளர்ந்து நிற்கும் கற்பக மரத்தில் உள்ள பூங்கொம்போமலர்கள் மலர்ந்த கொம்போ. பூ: ஒருமை பன்மை மயக்கம். காமன்தன்-மன்மதனுக்கு. தன்: அசைநிலை. பெரு வாழ்வோ