3] 0 பெரிய புராண விளக்கம்-2
-பெரிய வாழ்வை வழங்குபவளோ. பொற்புடைய-சிறப்பைப் பெற்ற, புண்ணியத்தின்-புண்ணியச் செயல்களைப் புரிந்தத னால் உண்டாகிய ஒருமை பன்மை மயக்கம். புண்ணியமோ -புண்ணியத்தின் பயனோ. புயல்-மேகத்தை; என்றது பரவையாருடைய கூந்தலை. சுமந்து-தன்னுடைய தலையில் தாங்கிக்கொண்டு. வில்-விற்களையும்; ஒருமை பன்மை மயக்கம்; என்றது. பரவையாருடைய புருவங்களை. குவளை குவளை மலர்களையும்; ஒருமை பன்மை மயக்கம்; என்றது பரவையாருடைய கண்களை. பவளம் அலர்-பவளங்களைப் பூத்த ണ്ണജഥ பன்ம்ை மயக்கம். என்றது. பரவையாருடைய அதரங்களை. மதி-சந்திரனை என்றது. பரவையாருடைய திரு முகத்தை. பூத்த-மலரச் செய்த விரை-நறுமணம் கமழும். கொடியோ-பூங்கொடியோ; இது திருமேனி முழு வதையும் குறித்துக் கூறியது. அற்புதமோ-இந்த உலகத்தில் எங்கும் காண முடியாத அற்புதமான வடிவமோ ஆகுபெயர். சிவன்-சிவ பெருமானுடைய. அருளோ - திருவருளோ. அறியேன்-அடியேன் தெரிந்து கொள்ள வில்லை. என்று-என எண்ணி. அதிசயித்தார்-அந்த நாயனார் வி ய ப் பை அடைந்தார்.
மகளிர் கூந்தலுக்கு மேகம் உவமை: காரியல் மெல்ஒதி நதிமாதை. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பதினிறக் கொண்மூ நெற்றி முள்கும், வானிற வளர்பிறை வண்ணம், கடுப்பச் சில்மெல் ஒதி சேர்ந்த சிறுநுதல்." (பெருங்கதை, 1; 4:14-6) என்று கொங்கு வேளிரும் பாடிய வற்றைக் காண்க. -- -
மகளிர் புருவித்துக்கு வில் உவமை:சிலையணி அழித்த சென்ற்ேந்து புருவத் தரிமலர் நெடுங்கணி." (பெருங்கதை, 2. 12: 91-2) என வருவதைக் காண்க. -
மகளிர் கண்ணுக்குக் குவளை மலர் உவமை: திருநீல மலரொண்கண் தேவி.', 'காவியங் கருங்கண்ணினாள்.', "காவியங்கண் மடவார். என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், குவளைக் கண்ணி கூறன் காண்க.”