தடுத்தாட்கொண்ட புராணம் 23
பூணுரல். அசைந்து-ஆடி. இலங்கு-விளங்கும். மார்பின்திருமார்பையும். நுணங்கிய-நுட்பமாக உள்ள. கேள்விபல நூல்களை அறிந்தவர்கள் வாயிலாய்க் கேட்ட கேள்வி யையும் பெற்ற மேலோன்-மேம்பாட்டைப் பெற்ற சுந்தர மூர்த்தி. மாலையும்-திருமணமாலையும். தாரும்-மாற்று மாலைகளும்; ஒருமை பன்மை மயக்கம். திருமணத்திற்கு முன்பு மணமகனும் மணமகளும் மாலைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்வது வழக்கம். பொங்க-பொங்கி நறுமணம் கமழ, மஞ்சன சாலை-திருமஞ்சன சாலை; குளிக்கும் அறை. புக்கான்-நுழைந்தான். . பின்பு வரும் 15-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:
நறுமணம் கமழும் எண்ணெயைத் தலையில் தேய்த் துக் கொண்டு, மிகுதியாக உள்ள மலர்களின் வாசனை பொருந்திய பரிசுத்தமான நீரை நிரப்பிய பாத்திரத்தில் பொருந்திய பக்கத்தில் பருத்த மாணிக்கத்தைப் பதித்ததும் பசுமையான தங்கத்தால் செய்ததும், உறுதியான கால களைக் கொண்டதுமாகிய ஒர் ஆசனத்தில் இருக்கச் செய்து அழகுள்ள நீரால் அபிஷேகம் செய்து குளிப்பாட்டி மஞ்சளை அணிந்து அன்போடு பரமேசுவரனாகிய திருநாவலீசுவர லுக்கு இனிய பக்தனாகிய சுந்தர மூர்த்தியினுடைய திருமேனி அழகைப் பெற்று விளக்கத்தை அடையுமாறு வேதியர்கள் செய்தார்கள். பாடல் வருமாறு:
'வாசநெய் ஊட்டி மிக்க மலர்விரை அடுத்த தூநீர்ப் பாசனத் தமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொன்
- - - - திண்கால் ஆசனத் தணிநீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் ஈசனுக் கினியான் மேனி எழில்பெற விளக்கி னார்கள்.' வாச-நறுமணம் கமழும்.நெய்-எண்ணெயை ஊட்டி-சுந்தர மூர்த்தியினுடைய தலையில் தேய்த்து. மிக்க-மிகுதியாக உள்ள. மலர்-பல வகை மலர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். விரை-நறுமணம். அடுத்த-பொருந்திய.
3.