பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓】2 பெரிய புராண விளக்கம்-2

மகளிருக்குப் பூங்கொடி உவமை: "தளரும் கொடி பன்னாள்.', "மலைவல்லி உமை.’’, 'பூங்கொடி மடவாள் உமை.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "இமவான் பெற்ற பெண்கொடி.." என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 141-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"இந்தப் பெண்மணியினுடைய சித்திரத்தை நான்கு முகங்களைப் பெற்ற பிரமதேவன் தன்னுடைய கையால் ஒரு கிழியில் தீட்ட முடியாமையால் தன்னுடைய கருத்தில் உண்டான விடாமுயற்சியினால் அமைத்துக் கொண்டதாகிய ஒர் ஒப்பற்ற மாணிக்கத் தீபமோ? இங்கே இந்த அழகிய வடிவம் அந்தர் மத்திய பாதலங்களில் வாழ்பவர்கள் புரிந்த தவத்தின் பயனால் என்னுடைய முன்னால் நின்றது' என்று எண்ணித் திருநாவலூரில் வாழ்பவர்களுடைய அரசராகிய சுந்தர மூர்த்தி நாயனார் வியப்பை அடைந்து நின்று: கொண்டிருந்தார்; ஐந்து மலரம்புகளையும் கரும்பு வில்லை. யும் தம்முடைய ஆயுதங்களாகக் கொண்ட மன்மதனார் அந்த நாயனாருக்கும் பரவையாருக்கும் இடையில் நின்றார்." பாடல் வருமாறு:

ஓவியம்கான் முகன் எழுத ஒண்ணாமை

- - உள்ளத்தால் மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணி

- விளக்கோ? மூவுலகின் பயனாகி முன்கின்ற தெனநினைந்து நாவலர்கா வலர்கின்றார்; நடுகின்றார் படை

மதனார். ' ஒவியம்-இந்தப் பெண்மணியினுடைய சித்திரத்தை. நான்முகன்-நான்கு முகங்களைப் பெற்ற பிரமதேவன். முகம்: ஒரும்ை பன்மை மயக்கம். எழுத-தன்னுடைய கையால் ஒரு. கிழியில் தீட்டுவதற்கு. ஒண்ணாமை-முடியாமையினால். உள்ளத்தால்-தன்னுடைய கருத்தில்; உருபு மயக்கம். மேவியல்