பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 313'

-உண்டாகிய். தன்-தன்னுடைய வருத்தம் உற-இடை விடாமல் வருத்தம் உண்டாகும் வண்ணம். விதித்ததுஅமைத்துக் கொண்டதாகிய, ஒரு-ஒப்பற்ற, மணி-ஒரு மாணிக்கத்தைப் பதித்த விளக்கோமதீபமோ. மூஉலகின்அந்தர் மத்திய பாதலமாகிய மூன்று உலகங்களில் வாழ்பவர் களுடைய இடஆகுபெயர். உலகு: ஒருமை பன்மை மயக்கம். பயனாகி-தவத்தின் பிரயோசனமாகி. முன்-எ ன க் கு முன்னால், நின்றது-நின்று கொண்டிருக்கின்றது. எனஎன்று இடைக்குறை. நினைந்து-எண்ணிக் கொண்டு. நாவலர்-திருநாவலூரில் வாழும் மக்களுடைய, ஒருமை. பன்மை மயக்கம், காவலர்-அரசராகிய சுந்தர மூர்த்தி நாயனார். நின்றார்-வியப்பை அடைந்து நின்றுகொண்டிருந் தார். படை-ஐந்து மலரம்புகளையும், கரும்பு வில்லையும், வண்டுகளாகிய நாணையும் ஆயுதங்களாகக் கொண்ட: ஒருமை பன்மை மயக்கம். அந்த ஐந்து மலர்களாவன: தாமரை மலர், மாமலர், அசோகமலர், முல்லைமலர், நீலோற்பல மலர் என்பவை: "நினைக்கும் அரவிந்தம் நீள்பசலை மாம்பூ, அனைத்துணர்வும் நீக்கும் அசோகு-. துணித்துணரின், முல்லை கிடைகாட்டும் முழுநீலம் மாதே. கொல்லும்மதன் அம்பின் குணம்.” என்று வருவதைக் காண்க. மதனார்-காமராஜர். நடு-அந்த நாயனாருக்கும் பரவையாருக்கும் இடையில். நின்றார்-தம்முடைய அம்பு களை எய்வதற்குச் சமயம் பார்த்து நின்று கொண்டிருந்தார். பிறகு உள்ள 142-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "சுந்தர மூர்த்தி நாயனார் பரவையாருடைய அழகைப் பார்த்து வியப்பை அடைந்து நின்றுகொண்டிருந்த போது, குளிர்ச்சியைப் பெற்ற முத்துக்களைக் கட்டிய தோடுகளும், மாணிக்கங்களைப் பதித்த மகரக் குழைகளும் சேர்ந்து காது. கள் வரைக்கும் தடுத்துக்கொண்டு ஒடுபவையும், கடைசிப் பக்கங்கள் பிறழ்பவையும், கெண்டை மீன்களைப் போன்ற வையும், நீளமாக உள்ளவையும் ஆகிய தம்முடைய கண்கள் வியப்பை அடைந்து பார்க்க, கிளர்ச்சியைப் பெற்றுப்