பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பெரிய புராண விளக்கம்-2

.பிரகாசத்தை வீசும் அணிகலன்களை அணிந்தவனும், சிறந்த அறிவை உடையவனும் ஆகிய சுந்தர மூர்த்தியை எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய வன்மீக நாதன் வழங்கிய திருவருளால் அயல் மனிதர்கள் தெரிந்து கொள்ளாதவாறு தம்முடைய திருவுள்ளம் சுந்தர் மூர்த்தியை விரும்ப, முன் பிறவியில் உள்ள நல்ல ஊழ் கூட்டி வைத்ததனால் பரவை யாராகிய பெண்மணியாரும் சுந்தர மூர்த்தியைப் பார்த்

தார். பாடல் வருமாறு:

தண்டரள மணித்தோடும் தகைத்தோடும் கடை - - - பிறழும் கெண்டைநெடும் கண்வியப்பக் கிளர்ஒளிப்பூண்

- - உரவோனை. அண்டர்பிரான் திருவருளால் அயல் அறியா -

மனம் விரும்பப் பண்டைவிதி கடைக்கூட்டப் பரவையாரும்

- கண்டார். தண்-சுந்தர மூர்த்தி நாயனார் பரவையாருடைய அழகைப் பார்த்து வியப்பை அடைந்து நின்றுகொண்டிருந்த போது குளிர்ச்சியைப் பெற்ற தரள-முத்துக்களைக் கட்டிய; ஒருமை பன்மை மயக்கம். தோடும்-தோடுகளும்; ஒருமை பன்மை மயக்கம்.தோடும் என்பதை இதற்கும் கூட்டுக.மணிமாணிக்கங்களைப் பதித்த, ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தோடும்-மகரக் குழைகளும்; ஒருமை பன்மை மயக்கம். தகைத்து-சேர்ந்து காதுகள் வரைக்கும் தடுத்துக் கொண்டு. ஒடும்-ஒடுபவையும்; வினையாலணையும் பெயர். கடைகடைசிப் பக்கங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிறழும்: புரளுபவையும்; வினையாலணையும் பெயர். கெண்டைகெண்டை மீன்களைப் போன்றவையும்; உவம ஆகுபெயர். கெண்டை ஒருமை பன்மை மயக்கம். நெடும்-நீளமாக விளங்குபவையும் ஆகிய வினையால்ணையும் பெயர். கண்தம்முடைய விழிகள்: ஒருமை பன்மை மயக்கம். வியப்பவியப்பை அடைந்து பார்க்க, க், சந்தி. கிளர்-கிளர்ச்சியைப்