பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 3 15

பெற்று. ஒளி-பிரகாசத்தை வீசும். ப்: சந்தி. பூண்-அணிகலன் களை அணிந்த ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: கிரீடம், வாகுவலயங்கள், முத்து மாலை, மாணிக்கமாலை, பவள மாலை, உருத்திராக்க மாலை, தங்க அரை ஞாண். வைரக் கடுக்கன்கள், வீரக்கழல், சிலம்புகள் முதலியவை. உரவோனை-சிறந்த அறிவைப் பெற்ற சுந்தர மூர்த்தியை. அண்டர் பிரான்-எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய வன்மீக நாதன். அண்டர்: ஒருமை பன்மை மயக்கம். திரு வருளால்-வழங்கிய திருவருளால். அயல்-வேறு மனிதர்கள்: தினை மயக்கம். அறியா-தெரிந்து கொள்ளாதவாறு. மனம்தம்முடைய திருவுள்ளம். விரும்ப-அத்தர மூர்த்தி நாயனாரை விரும்ப, ப், சந்தி: பண்டை-முன் பிறவியிலிருந்து வந்த, விதி-நல்ல ஊழ். இதை ஆகூழ் என்பர். கடைக்கூட்ட-கூட்டி வைத்ததனால். ப்: சந்தி. பரவையாரும்-பரவையாராகிய மாதரசியாரும். கண்டார்-சுந்தர மூர்த்தி நாயனாரைப் பார்த்தார். •r

மகளிர் கண்ணுக்குக் கெண்டை மீன் உவம்ை: 'கெண்டைகொண் டலர்ந்த கண்ணினார்.' என்று திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயன்ாரும், கெண்டை யந்தடங் கண் உமைநங்கை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை." என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 143-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'பரவையாருடைய திருமேனி கண்களால் பார்த்து அளவிட முடியாத பேரழகைச் சொரிந்த ஒளியை எங்கும் பரப்ப, வானம் கொள்ள முடியாத பெரிய பிரகாசத்தை வீசும் திருமேனியைப் பெற்றவனாகிய சுந்தர மூர்த்தி தன்னு டைய எதிரில் பார்க்கும் மென்மையான இயல்பைக் கொண்ட அந்தப் பெண்மணியினிடத்தில் கணக்கில்' அடங்காத காதலினால் முன்பு ஒரு காலத்திலும் அடையாத தாகிய ஒரு விருப்பமும், இந்த மண்ணுலகத்தில் எந்தப்