பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பெரிய புராண விளக்கம்-2

பெண்மணியும் மேற்கொள்ளாத நாணம், மடம், அச்சம், பயிர்புே என்னும் இயல்பை வலிந்து ஒதுக்கிவிட்டு எழுந்த வுடன். பாடல் வருமாறு:

கண்கொள்ளாக் கவின்பொழிந்த திருமேனி

கதிர்விரிப்பு விண்கொள்ளாப் பேரொளியான் எதிர்நோக்கும்

மெல்லியலுக் கெண்கொள்ளாக் காதலின்முன் பெய்தாத

தொருவேட்கை மண்கொள்ளா நாண்மடம் அச் சம்பயிர்ப்பை

. வலிந்தெழலும். ' இந்தப் பாடல் குளகம். கண்-பார்த்தவர்களுடைய கண்களுக்கு:ஒருமை பன்மை மயக்கம். கொள்ளா-அடங்காத. க்: சந்தி. கவின்-பேரழகை. பொழிந்த-மழையைப் போலச் சொரிந்த திருமேனி-பரவையாருடைய திருமேனி. கதிர்பிரகாசத்தை. விரிப்ப-பரவச் செய்ய விண்-ஆகாயம். கொள்ளா-சூரியன் சந்திரன் என்பவற்றாலும் அடையாத, ப்: சந்தி. பேரொளியான்-பெரிய பிரகாசத்தைத் தன்னுடைய திருமேனியிற் பெற்றவனாகிய சுந்தர மூர்த்தி. எதிர்-தன்னு: டைய எதிரில். நோக்கும்-வியப்பை அடைந்து பார்க்கும். மெல்-மென்மையான. இயலுக்கு-இயல்பைக் கொண்ட அதி தப் பெண்மணிக்கு ஆகுபெயர். எண்-கணக்கில், கொள்ளாஅடங்காத. க்: சந்தி. காதலின்-காதலினால், முன்புமுன்னால் ஒரு காலத்திலும். எய்தாதது-அடையாததாகிய. ஒரு வேட்கை-ஒரு விருப்பமும் மண்-இந்த மண்ணுலகத்தில் எந்தப் பெண்மணியும்; இட ஆகுபெயர். கொள்ளா-மேற் கொள்ளாத நாண்-நாணமும், பிற ஆடவரைப் பார்ப் பதற்கு வெட்கம் அடைதல். மடம்-மடமும்; கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்னும் இயல்பு; தனக்குத் தெரிந்திருந்தாலும் அந்தக் கருத்தை வெளியிடாமல் அடக்கிக் கொண்டு மற்றவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டல். அச்சம்-பயம். பயிர்ப்பை-பயிர்ப்பு என்னும் குணத்தைக்