தடுத்தாட்கொண்ட் புராண்ம் 3 I7
பயிர்ப்பாவது, பிற ஆடவர் தன்மேற்ப்ட்டால் அருவருப்புை அடைதல். வலிந்து-வலிமையோடு ஒதுக்கிவிட்டு. எழலும், எழுந்தவுடன். - -
மெல்லியல்: மெல்லினத்தார்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், சொல்லெதிர் கொள்ளாள்
மெல்லியல், , சில்லைச் சிறுசொல் .ெ ம ல் லி ய ல் மிழற்ற.', 'மெல்வியற் குலமகள்.', 'மெழுகுசெய் பாவை யின் மெல்லியல் அசைந்து., ' மெல்லியற் பணைத்தோள்
மகளிர்க்கு.', (பெருங்கதை, 1, 33; 178, 35; 248, 2, 2:46, 16. 115, 3. 7:11-2.) என்று கொங்கு வேளிரும், முல்லை சான்ற கற்பின் மெல்லியல், மடமான் நோக்கின் வாணுதல் விறலியர்.”,(சிறுபாணாற்றுப் படை) என்று நல்லூர் நத்தத் தனாரும், 'மெல்லியல் மகளிர் நல்லடி வருட. (நெடுகல் வாடை, 151) என்று நக்கீரனாரும், சொல்லலும் பழியோ மெல்லியலீர்.” (குறிஞ்சிப்பாட்டு, 145) என்று கபிலரும், “முல்லை சான்ற கற்பின், மெல்லியற் குறுமகள்,' (நற்றிணை, 10, 11) என்று இடைக்காடனாரும், மெல்லியற் குறுமகள் உறைவி னுரே...' (அகநானூறு, 274; 14) என்று அதே புலவரும், மெல்லிய லாளை நோக்கி." (அகலிகைப் படலம், 79), மெல்லியல் ஒருத்தி." (உண்டாட்டுப்படலம், -46), பூவின் மெல்லியல் மேணி." (பிணிவிடு படலம், 31), -:மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள்." (மாயாசனகப் படலம், 18) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க
பிறகு வரும் 144-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
சுந்தர மூர்த்தி நாயனாரைப் பார்த்த பரவையார், இந்த ஆடவன் எனக்கு முன்னால் வந்து என்னுட்ைய எதிரில் காட்சியை வழங்கியருளும் முருகப் பெருமானோ? பெருகி வீசும் திருமேனிப் பிரகாசத்தோடு தோற்றம் அளிக்கும் தனக்கு ஒப்பு யாரும் இல்லாத மன்மதனோ? மலர் மாலையை அணிந்திருக்கும் மார்பைப் பெற்ற ஒரு வித்தியா தரனோ? மின்னலைப் போன்ற சிவந்த சடாபாரத்தைத் தன்னுடைய தலையின்மேற் கொண்ட தலைவனாகிய