பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 3.19.

அழகுடைய ஆடவனுக்கு முருகன் உவமை: 'கந்தனை அனையவர் கலைதெரி கழகம்..” என்று கம்பராமாயணத்தில் வருவதைக் காண்க.

சடைக்கு மின்னல் உவமை:மின்னி லங்கு சடையான்.”, "மின்னிற்பொலி சடையான்.', மின்னலிலும் செஞ் சடையான்.', மின்னார்சடை', மின்திகழ் செஞ்சடை யான்.', மின்னியல் செஞ்சடை', மின்னேர் சடைகள் உடையான்,, மின்னு லாவிய சடையினர்.', மின்னியல் செஞ்சடை வெண்பிறையன்.', மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்,, மின்னை விரிபுன்சடை." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'மத்தம் மின்திகழ். சடையில் வைத்து., மின்னும் ஒப்பர் விரிசடை.', 'புன் சடை யின்புறம் மின் உள்ள.', மின்னியலும் வார்சடை எம்பெருமான்,', மின்னொத்த செஞ்சடை வெண்பிறை யார்,' என்று திருநாவுக்கரசு நாயனர்ரும், மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், மின்போலும் செஞ்சடை யான்.’’ என்று காரைக்கால் அம்மையாரும், மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், மின்செய்வார் செஞ்சடையாய்.” என்று நக்கீர தேவநாயனாரும் பாடியருளியவற்றைக். காண்க. - - -

பிறகு உள்ள 145-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பரவையார் தலைவனாகிய அந்தச் சுந்தர மூர்த்தி யினிடத்தில் உண்டான அளவுகடந்த காதலால் தம்முடைய உள்ளத்தில் நிறைந்திருக்கும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் ஒரு பக்கத்தில் சாய்ந்து விட்டன என்றாலும், அழகிய நிறத்தைப் பெற்ற மலர்களை அணிந்த கருமையான கூந்தலை உடையவரும், மடப்பத்தைக் கொண்டவரும், பூங்கொடியைப் போன்ற வரும் ஆகிய பரவையாரை வன்மையைப் பெற்ற உள்ளத்தை