இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
320 பெரிய புராண விளக்கம்-2
- உடையவராகச் செய்து நெற்றியில் ஒற்றைக் கண்ணை உடையவராகிய வன்மீக நா த ைர வணங்குவதற்கு உண்டான பக்தியே கடைப்பிடித்து அவரைப் போகுமாறு செலுத்த. பாடல் வருமாறு:
அண்ணலவன் தன்மருங்கே அளவிறந்த
- காதலினால் உண்ணிறையும் குணம்கான்கும் ஒருபுடை - - சாய்க் தன எனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தல் மடக்கொடியை
வலிதாக்கிக் கண்ணுதலைத் தொழும்அன்பே கைக்
- . . . . கொண்டு செலஉய்ப்பு. ' இந்தப் பாட ல் குளகம். அண்ணல் அவன்தன்-பரவை யார் தலைவனாகிய அந்தச் சுந்தர மூர்த்தியினுடைய. தன்: அசைநிலை. மருங்கு-பக்கத்தில், ஏ: அசை நிலை. அளவு இறந்த-அளவைக் கடந்த. காதலினால்-காதலால். உள்தம்முடைய திருவுள்ளத்தில், நிறையும்-நிறைந்து விளங்கும். குணம் நான்கும்-நாணம், அச்சம், மடம், பபிர்ப்பு என்ற நான்கு உத்தமமான பண்புகளும்; குணம்: ஒருமை பன்மை மயக்கம், ஒரு புடை-சுந்தர மூர்த்தி நாயனாரின் ஒப்பற்ற பக்கமாக, சாய்ந்தன-சாய்ந்து விட்டன. எனினும்-என்றா லும்; இடைக்குறை. வண்ண-பல நிறங்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம், மலர்-மலர்களை அணிந்த ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன: மல்லிகை மலர், முல்லை மலர், மகிழ மலர், தாழம்பூ, சாதி மல்லிகை மலர், ஊசி முல்லை மலர், கொன்றைமலர் முதலியவை. க்: சந்தி. கரும்-கருமையான, கூந்தல்-கூந்தலையும். மட-மடப்பத்தை யும். க்: சந்தி, கொடியை-பூங்கொடியைப் போன்ற தோற்றத் தையும் கொண்ட பரவையாரை; உவமஆகு பெயர். வலிது ஆக்கி-வலிமையை உடையவராகச் செய்து; திண்ைமயக்கம், க்: சந்தி. கண்ணுதலை-நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் படைத்த் வன்மீக நாதரை. த்: சந்தி. தொழும்-வணங்கும்.