பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 . பெரிய புராண விளக்கம்-2

துர:துாய்மையான நீர்-நீரை நிரப்பிய. ப்:சந்தி. பாச னத்து-ஒரு பாத்திரத்தில் அமைந்த-ஊற்றிய பாங்கர்பக்கத்தில் . ப்:சந்தி. பரு-பருத்த. மணி-மாணிக்கங் களைப் பதித்ததும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பைம்-பசுமையான பொன்-தங்கத்தால் செய்ததும்; ஆகு பெயர். திண்-உறுதியான, கால்-கால்களைப் பெற்றது மாகிய, ஒருமை பன்மை மயக்கம். ஆசனத்து-ஒர் ஆசனப் பலகையில் அமர்த்தி. அணி-அழகிய நீர்-நீரினால். ஆட்டி-குளிப்பாட்டி. அரிசனம்-மஞ்சளை. ஆடவருக்கும் மஞ்சளைப் பூசுதல்: டைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்ச ளால் ' (பெரியாழ்வார் திருமொழி, 1 18:2) என வருத லைக் காண்க. சாத்தி-பூசி. அன்பால்-அன்போடு; உருH மயக்கம். ஈசனுக்கு-பரமேசுவரனாகிய திருநாவலீசுவர னுக்கு. இனியான் இனிய பக்தனாகிய சுந்தரமூர்த்தியி னுடைய. மேனி-திருமேனி. எழில்-அழகை. பெறபெறும்வண்ணம். விளக்கினார்கள்-வேதியர்கள் விளக் கத்தை அடையுமாறு செய்தார்கள். .

பின்பு உள்ள 16-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அகில் மரக்கட்டைகளைத் தீயில் இட்டு எரித்த வாசனை வீசும் புகை பொருந்திய அழகைக் கொண்ட பட்டு டையை இடையில் உடுத்துக்கொண்டு மேகங்களினூடே நுழையும் சந்திரனைப் போலத் தன்னுடைய கைத்தொழி லில் வல்லமை பெற்ற மயிர்வினைஞன் தன் முன் கைகளில் சுற்றியுள்ள மெல்லிய ஆடையைக்கொண்டு தலைமயிரில் உள்ள ஈரத்தைத் துடைத்து உலரச்செய்து தன்னுடைய தூய்மையான சிவந்தகையினால் நகங்களினுடைய நுனிகளை முறைப்படி வெட்டிப் போக்கிவிட்டு ஒளி வீசும் நறுமணம் கமழும் கொண்டையைக் கட்டிவிட்டான்.” பாடல் வருமாறு: '