பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322. பெரிய புராண விளக்கம்-2

பக்கத்திலும் போகாதவாறு. தடை-தடையை. செய்யஉண்டாக்க. மடவரலும் - மடப்பம் வருதலை உடைய அந்தப் பெண்மணியும். தேம்-தேன் நிரம்பிய, கோதைமாலையாகக் கட்டிய மலர்-மலர்களை அணிந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. குழல்மேல்-தன்னுடைய கூந்தலின்மேல். சிறை-சிறகுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். கலந்து-கூடிக்கொண்டு. ஆர்ப்ப-மொய்த்து ரீங்காரத்தைச் செய்ய, ப், சந்தி. பூங்கோயில்-திருவாரூர்ப் பூங்கோயிலில். அமர்ந்த-விரும்பி எழுந்தருளியுள்ள. பிரான்-தலைவனாகிய வன்மீக நாதனுடைய. பொன்-தங்கத்தால் வேய்ந்த விமானத்தைக் கொண்ட கோயில்-ஆலயத்துக்கு. போய்பரவை எழுந்தருளி. ப்: சந்தி. புகுந்தார் - உள்ளே நுழைந்தாள். -

i மடவரல்: மடமான் விழிஉமை.’’, மடவார் இடுபவி.', 'மடவாரொடு மகிழ்மைந்தர்கள்.’’, மலையார் தரு மட்வாள்.', 'பல்வளைக்கை மடவரலானை.", மட்மாதொர் பாகமாய்.”, “மடம்படு மலைக்கிறைவன் மங்கை.”, “மடத்ல்லார் மாமயிலை., 'மயிலன்ன சாயல் மடமங்கை.". "மடமுடையவர் ப்யில்வைகல்மா நகர்.”, 'ம்டவரல்.இ.முடைச் சடையினன்.', 'ம ட வ ர ல் பங்கினன்.", "மடவார்கள் புனலாடுவது.", "பூங்கொடி மட்வாள் உமை.”, "காவியங்கண் மடவாளொடும்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மலைம்ட மங்கை யோடும்.', வெற்பின் இடை மடவலை. கரும்பமரும் மொழிமடவாள்.' சுரும்பமரும் குழல்மட வார்.", "மலைவளர்த்த மடமங்கை.', 'மருவுற்ற மலர்க் குழலி மடவாள்.', 'வரையார் மடமங்கை பங்கா. , "வரையார்ந்த மடமங்கை பங்கன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், மழைக்கண் மடவாளை ஒர்பாகம் வைத்தீர்.”, ஷாளன கண்மடவாள்.', ' வரிநெடுங்கண் மடவரல் உமை. மலைக்கண் மடவாள் ஒருபாலாய்.", "மலை