தடுத்தாட்கொண்ட புராணம் 337
நீயும் ஆகம் குளிர்ந்தாயோ. (பம்பா நதிப் படலம், 27.), "தோகை மகளிர் குழாத்தினால்.', 'மயிலியல்...மாதர்.” (கிட்கிந்தைப் படலம், 45, 77), மயிலியற் றேவி மார்கள்.” (கடல்தாவு படலம், 12), மயிலி யற்குயில் மழலையாள்.', (காட்சிப் படலம், 4), மயிலினைத் தொழுது தோன்றி னான்.' (உருக்காட்டு படலம், 22), மயிலியற் சீதை.' (பிணிவிடு படலம், 15), மயிற்புனை இயலி னாரும்.” (திருவடி தொழுத படலம், 71) என்று கம்பரும் பாடியருளிய வற்றைக் காண்க. மயிலியல் உமையினை. (இராவணன் பிறப்புப் படலம், 49), புனமயிற் சாயற்பைம் பொற்பூண் முலை ஒருத்தி. (அசுவமேத யாகப் படலம், 92) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.
தொண்டைச் செங்கனி வாய்: தொண்டை வாயினிர்.” மந்திரப் படலம், 89.), தொண்டைவாய்க் கேகயன் தோகை. (மந்தரை சூழ்ச்சிப் படலம், 41), 'தொண்டை வாய் மடந்தைமார்.’’ (கைகேசி சூழ்வினைப் படலம், 79), 'தொண்டையஞ் சேயொளித் துவர்த்தவாய்." (அயோ முகிப் படலம், 68), கொவ்வைப் பழனும்...தவளம்என்று ரைக்கும் வண்ணம் சிவந்து... வாய்.” (நாடவிட்ட படலம், 49), தொண்டைவாய் மயிலினை. (உருக்காட்டு படலம், 22), தொண்டையங் கனிவாய்ச் சீதை.” (பொழில் இறுத்த படலம், 0) என்று கம்பராமாயணத்தில் வருவனவற்றைக் காண்க.
அடுத்து உள்ள 148-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
"அந்தத் தொண்டர்கள் கூறியதைக் கேட்ட சுந்தர மூர்த்தி நாயனார், "இந்தப் பெண்மணியினுடைய திருநாமம் பரவை என்பது; இவள் தன்னுடைய பெண்ணுக்குரிய தன் மையில் பெருமையைப் பெற்ற தேவலோகத்தில் வாழும் தேவர்களின் கூட்டம் விரும்புகின்ற பெண்குறிகளைப் பெற்ற அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை முதலிய தெய்வப் பெண்மணிகள் வாழ்த்தித் துதிக்கும் தலைமையை