'328 பெரிய புராண விளக்கம்-2
உடைய தெய்வ மங்கை; அழகோடு விளங்கும் இவளுடைய முத்துக்களைப் போலப் புன்னகை புரியும் பற்கள் முல்லை அரும்புகளைப் போலக் காட்சி அளிக்கும்; சீர்த்தியைப் பெற்ற பரவை என்னும் கூத்தை ஆடியருளும் திருமகளைப் போன்ற இவளுடைய திருவுருவத்தினுடைய மென்மையான சாயல் என்னும் அழகிய சமுத்திரத்தின் நடுவில் அகப்பட்ட என்னுடைய காதல் ஏழு சமுத்திரங்களைப் போன்றது." பாடல் வருமாறு:
பேர்பரவை பெண்மையினிற் பெரும்பரவை
. விரும்பல்குல் லார்பரவை அணிதிகழும் மணிமுறுவல்
அரும்பரவை சீர்பரவை ஆயினாள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை யிடைப்பட்ட என்ஆசை எழு
பரவை. '
பேர்-அந்தத் தொண்டர்கள் கூறியதைக் கேட்ட சுந்தர மூர்த்தி நாயனார், இந்தப் பெண்மணியினுடைய திருநாமம். பரவை-பரவை என்பது. பெண்மையினில்-இவள் தன்னிடம் உள்ள பெண்ணுக்குரிய தன்மையில். பெரு-பெருமையைப் பெற்ற, உம்பர்.தேவலோகத்தில் வாழும் தேவர்களுடைய: ஒருமை பன்மை மயக்கம். அவை-கூட்டம். விரும்பு-விரும்பு கின்ற. அல்குலார்-பெண்குறிகளைப் பெற்றவர்களாகிய அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை முதலிய தெய்வப் பெண்கள்: ஒருமை பன்மை மயக்கம். பரவுவாழ்த்தித் துதிக்கும். ஐ-தலைமையைப் பெற்ற தெய்வ மங்கை. அணி-அழகோடு. திகழும்-விளங்கும். மணி-முத்துக் களைப் போன்ற : ஒருமை பன்மை மயக்கம். முறுவல்புன்னகை பூக்கும் பற்கள்: ஆகுபெயர்: ஒருமை பன்மை மயக்கம். அரும்பர்-முல்லை அரும்புகளைப் போன்றவை; ஒருமை பன்மை மயக்கம். அவை: பகுதிப் பொருள் விகுதி. சீர்-சீர்த்தியைப் பெற்ற, பரவை-பரவை என்னும் கூத்தை ஆடியருளும் திருமகளைப் போல; ஆகுபெயர். ஆயினாள்