பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 3罗姆

இருப்பவளுடைய. திரு உருவின்-திருமேனியாகிய வடிவத்தில் அமைந்த. மென்.மென்மையான. சாயல்-சாயல் என்னும். ஏர்-அழகைக் கொண்ட பரவை-சமுத்திரத்தின். இடைப் பட்ட-நடுவில் அகப்பட்ட. என்-என்னுடைய. ஆசைகாதல். எழு-ஏழு. பரவை-கடல்களைப் போன்றது; உவம ஆகுபெயர்: ஒரும்ை பன்மை மயக்கம்.

இவ்வாறன்றி, பெரும் பரவை’ என்பதைப் பெரு உம்பர் அவை என்று பிரித்து, பெரிய தேவர்களுக்குத் தாயைப் போன்றவள்' என்று பொருள் கொள்ளுதலும் ஆம். உம்பர்ஒருமை பன்மை மயக்கம். அவை-அவ்வை: தாய்: இடைக் குறை. விரும்பல்குலார் பரவை’ என்பதை, விரும்பு அல்குல் ஆர்பு அரவு ஐ என்று பிரித்து, விரும்புகின்ற நிதம்பத்தி னுடைய அழகின் நிறைவு ஆதிசேடனாகிய பாம்பின் படத்தை ஒத்திருக்கும் என்று பொருள் கூறுதலும் ஆம். ஆர்பு-நிறைவு; தொழிற்பெயர். அரவு ஐ-பாம்புகளின் தலைவனாகிய ஆதிசேடனுடைய படம்; அரவு; ஒருமை பன்மை மயக்கம். ஐ-தலைவனாகிய ஆதிசேடனுடைய படம்: ஆகுபெயர். சீர்பரவை ஆயினாள்' என்பதை, சீர் பரவு ஐ ஆயினாள் என்று பிரித்து, திருமகளும் துதி செய்யத் தக்க அழகைப் பெற்றவள் என்று பொருள் கூறுதலும் பொருந்தும்.

பிறகு வரும் 149-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"சுந்தர மூர்த்தி நாயனார் என இத்தகைய பலவற்றை யும் எண்ணிவிட்டு அடியேங்களுடைய தலைவனாகிய கைலாசபதி திருவாய் மலர்ந்தருளிச் செய்த முறைப்படி இந்தப் பிறவிக்கு முன்னால் இருந்து தொடர்ந்து வரும் காதல் என்னும் முறையில் கட்டப்பெற்று, நன்றாக அடியேனைத் தடுத்து ஆட்கொண்டவராகிய வன்மீக நாதரிடத்தை அடைவேன்' என்று தம்முடைய திருவுள்ளத் தில் மகிழ்ச்சியை அடைந்து போய், ஆளுடைய நம்பியாகிய அந்தநாயனார் எழுந்தருளி எல்லாத் தேவர்களுக்கும் தலைவ