தடுத்தாட்கொண்ட புராணம் 25,
'அகில்விரைத் தூபம் ஏய்ந்த
அணிகொள்பட் டாடை சாத்தி
முகில்நுழை மதியம் போலக்
கைவலான் முன்கை சூழ்ந்த
துகில்கொடு குஞ்சி ஈரம்
புலர்த்தித்தன் தூய செங்கை
உகிர்றுதி முறையில் போக்கி
ஒளிர்ாறும் சிகழி ஆர்த்தான்.'
அகில்-அகில்மரக்கட்டைகளைத் தீயில் இட்டு எரித்த; ஒருமை பன்மை மயக்கம். விரை-நறுமணம் கமழும். த்: சந்தி. துாபம்-புகை. ஏய்ந்த-பொருந்திய. அணி. அழகை, கொள்-கொண்ட பட்டாடை-பட்டு உடையைசாத்தி-தன்னுடைய இடுப்பில் உடுத்துக்கொண்டு. முகில்மேகங்களினூடே ஒருமை பன்மை மயக்கம். நுழை-நுழை யும். மதியம்போல-சந்திரனைப்போல. க்: சந்தி, கைகைத் தொழில் வலான்-வல்ல மயிர்வினைஞன், இடைக் குறை. முன்கை-கைகளின் முன்னால்: கை: ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்த-சுற்றியிருந்த து கி ல் - .ெ ம ல் லி ய ஆடையை கொடு-கொண்டு. குஞ்சி-குளித்ததால் இருந்த தலைமயிரில் உள்ள. ஈரம்-ஈரத்தை. புலர்த்தி-துடைத்து உலரச்செய்து. த்: சந்தி. தன்-தன்னுடைய. துTயது.ாய்மையான. செம்-சிவந்த, கை-வலக்கையினால். உகிர்-சுந்தரமூர்த்தியினுடைய கைகளிலும் பாதவிரல்களி லும் உள்ள நகங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். றுதி-துணிகளை, ஒருமை பன்மை ம ய் க்க ம். முறையில்-முறைப்படி போக்கி-வெட்டி நீக்கிவிட்டு. ஒளிர்ஒளியை வீசும். நறும்-நறுமணம் கமழும். சிகழி-கொண் டையை. ஆர்த்தான்-சுந்தர மூர்த்தியின் தலையில் கட்டி
விட்டான்.