பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.332 பெரிய புராண விளக்கம்-2

இறைஞ்சி.", "சில்லைச் சிறுசொல் மெல்லியல் மிழற்ற..", "மெல்லியல் மாதரை உள்ளகம் புகுத்தி,, 'மெல்லியற்

குலமகள்.', 'மெழுகுசெய் பாவையின் .ெ ம ல் லி ய ல் அசைந்து. , ' மெல்லியற் பனைத்தோள் மகளிர்க்கு., "மெல்லியற் கோமகள் மெல்லென வாங்கி.", "மெல்லியல்

மாதர் நகுமொழி பயிற்ற..” (பெருங்கதை, 1, 33; 178, 35: 248, 38: 259, 2. 2:46, 2, 16; 115, 3. 7:11-2, 8: 94, 22: 119) என்று கொங்கு வேளிரும், முல்லை சான்ற கற்பின் மெல்லியல், மடமான் நோக்கின் வாணுதல் விறவியர்.' ..(சிறுபாணாற்றுப்படை. 30-31) என்று நத்தத்தனாரும், "மெல்லியல் மகளிர் நல்லடி வருட. (நெடுநல் வாடை 151) என்று நக்கீரனாரும், சொல்லலும் பழியோ மெல்லியலிர்.' (குறிஞ்சிப் பாட்டு, 145) என்று கபிலரும், மெல்லிய லாளை நோக்கி." (அகலிகைப் படலம், 79), மெல்லியல் முலை களும் விம்ம விம்முவாள். (கார்முகப் படலம், 63), "மெல்லியல் ஒருத்தி. (உண்டாட்டுப் படலம், 46), * பாருழையி னில்லதொரு மெல்லுருவு. (சூர்ப்பனகைப் படலம், 36) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 151-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"சுந்தரமூர்த்தி நாயனார் அவ்வண்ணம் வன்மீக நாதரை வணங்கித் துதித்துவிட்டு, அழகைப் பெற்ற திருவாரூர்ப் பூங்கோயிலில் விளங்கும் அழகிய பாம்புப் புற்றில் எழுந்தருளி -யிருப்பவரும், மையின் நிறம் தங்கியிருக்கும் அழகிய கழுத்தைக் கொண்ட மகர் தேவரும் ஆகிய வன்மீக நாதரிடத்திலிருந்தும் வந்து என்னுடைய இனிய உயிரைப் போன்றவளும், அன்னப் பறவையைப் போன்றவளும் ஆகிய பரவை எந்த வழியாகப் போனாள்?' என்று எண்ணி அந்த நாயனார் சிவந்த அதரங்களோடு கூடிய வாயையும், வெண்மையான பற்களையும் பெற்றவளும், பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய அந்தப் பெண்மணியைத் தேடிக் கொண்டு போவா ரானார். பாடல் வருமாறு: -