பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் :

அவ்வாறு பணிக்தேத்தி அணிஆரூர் மணிப்

புற்றின் மைவாழும் திருமிடற்று வானவர்பால்

நின்றும்போங், தெவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம்

அன்னம்?' எனச் செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவா

ராயினார், :

அவ்வாறு-சுந்தர மூர்த்தி நாயனார் அந்த வண்ணம். பணிந்து-வன்மீக நாதரை வணங்கி. ஏத்தி-துதித்துவிட்டு. அணி-அழகைப் பெற்ற. அலங்காரத்தைப் பெற்ற எனலும். ஆம். ஆரூர்-திருவாரூர்ப் பூங்கோயிலில் விளங்கும்; ஆகு பெயர். மணி-அழகிய புற்றின்-பாம்புப் புற்றில் எழுந்தருளி யிருப்பவரும்; இட ஆகுபெயர். மை-மையினுடைய நிறம். வாழும்-தங்கியிருக்கும். திரு-அழகிய மிடற்று-கழுத்தைக் கொண்ட வானவர்-மகா தேவரும் ஆகிய வன்மீக நாதரு. டைய, பால் நின்றும்-இடத்திலிருந்தும். போந்து-லந்து. என்-என்னுடைய. இன்-இனிமையான. உயிராம்-உயிரைப் போன்றவள் ஆகும்; உவம ஆகுபெயர். அன்னம்-அன்னப் பறவையினுடைய தோற்றத்தையும் நடையையும் கோண்ட வள்; உவம ஆகுபெயர். எவ்வாறு-எந்த வழியாக. சென் றாள்- போனாள். என-என்று எண்ணி; இடைக்குறை, ச்: சந்தி. செவ்-சிவந்த அதரங்களோடு கூடிய, வினை யாலணையும் பெயர். வாய்-வாயையும், வெண்-வெண்மை. யான. நகை-பற்களையும்; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கொடியை-பூங்கொடியைப் போன்ற திருமேனியையும் பெற்றவளை: உவம ஆகுபெயர். த், சந்தி, தேடுவார்தேடிக்கொண்டு போவார். ஆயினார்-அந்த நாயன்ார் ஆனார்.

மகளிருக்கு அன்னப் பறவை உவமை: "அன்னம் அன்ன மென்னடையாள்.', 'அன்ன நடையார் மனைகள் தோறும்

  • * * *

அழகாற் பலிதேர்ந்து.', 'அன்னமன நடையாள் ஒருபாகத்