தடுத்தாட்கொண்ட புராணம் 335
நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்.", "அன்னமென.வஞ்சமகள் வந்தாள்.', * அ, இன் ன ம் மின்னிடை அலச ஒடி.' (சூர்ப்பணகைப் படலம், 5, 31, 8.9) தாமரை வனத்திடை தாவும் அன்னம்போல், தூமவெங் காட்டெரி தொடர்கின் றாள்தனை.', 'குலைவுறல் அன்னம்.', 'அன்னம் அயர்கின்றது நோக்கி." (சடாயு உயிர் நீத்த படலம், 14, 68, 105), சனகன் பெற்ற அன்னத்தை.' (வாலிவதைப் படலம், 78), "தூவி அன்னம் அன்னாள்.' (கார்காலப் படலம், 51), களிமட அன்னம் என்ன...அரக்கர் மாதர்.” (ஊர் தேடு படலம், 103), 'அன்ன நடையாய் கேட்கென்ன அறிய அறைவா னா யினான்.' (உருக்காட்டு படலம், 59), அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள். , (மீட்சிப் படலம், 244) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க. 'அன்னமென் னடையினார் அடியிணை வருட." (திக்கு விசயப் படலம், 242), 'அன்னமென் னடைநேர் நருமதை என்னும் அரிவை, (கார்த்தவீரியார்ச் சுனப் படலம், 3), 'அன்னமென் னடைநுண் மின்னிடை மருங்குல் அணிதிகழ் மேகலை.', 'மென்னடை அன்னம் நின்ன்டைக் கஞ்சி வெளியிடை நின்றிட வெள்கித் துன்னிடை மலர்ப்பூஞ் சோலையில் மறைய..' (சீதைவனம் புகுபடலம், 16, 17) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.
அடுத்து வரும் 152-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
"சுந்தர மூர்த்தி நாயனார் பரவையாரைத் தேடும் போது,பந்த பாசமாகிய அடியேனுடைய தீய வினையாகிய பற்றை அறுப்பதற்காக மிகுதியாக இருக்கும் ஆசைக்கு மேலாகவும் ஒர் ஆசையை உண்டாக்குவதாகிய ஒளியோடு நிலைபெற்று விளங்கி என்னுடைய உள்ளத்தை மயங்கச் செய்த பரமேசுவரராகிய வன்மீக நாதருடைய திருவருளைப் போன்ற பெண்மணி எந்த வழியாகப் போனாளோ?' என்று எண்ணினார். பாடல் வருமாறு: